நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ எச்எம்டி குளோபல் இப்போது அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பிழைத் திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. மேலும் டார்க் மோட் உட்பட பல்வேறு வசதிகள் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ல் கிடைக்கும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது, தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக பின்புற கேமராவில் தெளிவான படங்களை எடுக்கும் சென்சார் அமைப்பு உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications