நோக்கியா 3.1ஏ மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
இந்த ஸமார்ட்போன்களில் 2900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
அமெரிக்காவில் நோக்கியா 3.1ஏ மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதற்குமுன்பு நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 3.1சி :
நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன் மாடலகள் பொதுவாக 5.45-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 1440 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 3.1 சிப்செட்:
நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 429சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

பேட்டரி:
இந்த ஸமார்ட்போன்களில் 2900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் வரும் ஜீன் 14-ம் தேதி முதல் புதிய நோக்கியா 3.1ஏ மற்றும் நோக்கியா 3.1சி ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications