பேரு தான் மாஸ்-மத்ததெல்லாம் தமாஷ்! Nokia Flip 2660 ரிவ்யூ

|

சமீபத்தில் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2660 பிளிப் (Nokia Flip 2660) போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போன் சிறந்த வடிவமைப்புடன் குறைந்த விலையில் அறிமுகமானது.

பீச்சர் போன்

குறிப்பாக இந்த பீச்சர் போன் குறைந்த விலையில் வெளிவந்துள்ளதால் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
ஆனால் இந்த போனை வாங்கும் முன்பு, இதன் அம்சங்களை முழுமையாகத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.11,499க்கு அறிமுகமான 5G ஸ்மார்ட்போன்: இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் போன் இதுதான்!ரூ.11,499க்கு அறிமுகமான 5G ஸ்மார்ட்போன்: இந்த அம்சம் கொண்ட உலகின் முதல் போன் இதுதான்!

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த நோக்கியா போனின் முக்கிய அம்சம் என்னவென்றால், அது டிஸ்பிளே தான். அதாவது நோக்கியா 2660 பிளிப் போன் 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. கண்டிப்பாக இந்த போன் ஒரு சிறந்த டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டிஸ்பிளே கொண்ட பீச்சர் போன்களை அறிமுகம் செய்ததில்லை. கண்டிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும்.

இந்த வாரம் ஒரு பிரளயமே இருக்கு: ஒன்னு, ரெண்டு இல்ல.. நீங்க மட்டும் தயாரா இருங்க!இந்த வாரம் ஒரு பிரளயமே இருக்கு: ஒன்னு, ரெண்டு இல்ல.. நீங்க மட்டும் தயாரா இருங்க!

எமர்ஜென்சி பட்டன்

எமர்ஜென்சி பட்டன்

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது எமர்ஜென்சி பட்டன் (emergency button) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம்
அவசரக்காலத்தில் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ளமுடியும். குறிப்பாக அவசரக்காலத்தில் தொடர்புகொள்வதற்காக 5 போன் எண்களை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!உஷார் மக்களே.! இப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தா அதை நம்பாதீங்க.! EB பில் மூலம் பண மோசடி!

பிராசஸர்?

பிராசஸர்?

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளது. அதேபோல் Unisoc T107 பிராசஸர் வசதியைக் கொண்டு
வெளிவந்துள்ளது நோக்கியா போன். பீச்சர் போன்களில் இதுபோன்ற பிராசஸர் வசதி இடம்பெறுவது மிகவும் நல்லது தான்.

யானையும் Appleம் ஒன்னு- இந்த வாட்சை ரிப்பேர் செய்யும் செலவிற்கு 3 Smart TV வாங்கிருவோம்..யானையும் Appleம் ஒன்னு- இந்த வாட்சை ரிப்பேர் செய்யும் செலவிற்கு 3 Smart TV வாங்கிருவோம்..

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

நோக்கியா 2660 பிளிப் போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமரா வசதி உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதுபோன்ற கேமரா பயன் கொடுக்காது. இதற்குப் பதிலாக ஒரு 5எம்பி கேமராவை கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

எனவே எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த நோக்கியா போனின் கேமரா விஷயத்தில் அருமையாக சொதப்பி உள்ளது என்றே கூறலாம்.

யோசிக்காம இன்றே Realme C33 போனை வாங்கினால் விலை 8,999 மட்டுமே: என்ன செய்யணும் தெரியுமா?யோசிக்காம இன்றே Realme C33 போனை வாங்கினால் விலை 8,999 மட்டுமே: என்ன செய்யணும் தெரியுமா?

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது

48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். மேலும் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000-க்குள் 5ஜி போன்கள் கிடைக்குமா? Xiaomi நிறுவன இந்திய தலைவர் கூறிய பதில் இதுதான்!ரூ.10,000-க்குள் 5ஜி போன்கள் கிடைக்குமா? Xiaomi நிறுவன இந்திய தலைவர் கூறிய பதில் இதுதான்!

எம்பி3 பிளேயர் ஆதரவு

எம்பி3 பிளேயர் ஆதரவு

நோக்கியா போனில் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ வசதி உள்ளது. பின்பு எம்பி3 பிளேயர், புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். கண்டிப்பாக இந்த கேம் வசதிகள் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம்.

Thomson நிறுவனம் அறிமுகம் செய்த QLED ஸ்மார்ட் டிவிகள்: நம்பமுடியாத விலை.!Thomson நிறுவனம் அறிமுகம் செய்த QLED ஸ்மார்ட் டிவிகள்: நம்பமுடியாத விலை.!

1450 எம்ஏஎச் பேட்டரி

1450 எம்ஏஎச் பேட்டரி

புதிய நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த போன் VoLTE ஆதரவுடன் டூயல் 4G கனெக்ஷனை வழங்கும்.

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கிறது நோக்கியா 2660 பிளிப் போன். மேலும் இந்த போனின் விலை ரூ.4,699-ஆக உள்ளது. இந்த பீச்சர் போனில் கேமரா வசதி மட்டும் சொதப்பல், மற்றபடி அருமையான வடிவமைப்பு, 4ஜி ஆதரவு, சூப்பரான டிஸ்பிளே போன்ற சில சிறப்பான வசதிகள் உள்ளன.

அதேபோல் சிறந்த வடிவமைப்பு கொண்ட பீச்சர் போன் வேண்டும் என்றால் மட்டும் இந்த பிளிப் போனை தேர்வு செய்யவும். மற்றபடி குறைந்த விலையில் நோக்கியா 2660 பிளிப் போனை விட நல்ல பீச்சர் போன்கள் சந்தையில் கிடைக்கிறது. அவற்றை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

அதாவது ரூ.3000-க்கு கீழ் நிறைய பீச்சர் போன்கள் இந்தியாவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia 2660 Flip Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X