நாளை இந்தியாவில் அறிமுகமாகும் Nokia 2660 Flip போன்: ஆளுக்கு 2 பார்சல்!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்மாடலை நாளை (ஆகஸ்ட் 30) அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். குறிப்பாக இந்த தகவல் நோக்கியா மொபைல் இந்தியா ட்விட்டர் மூலம் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்
இந்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன் ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகும்என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இயங்குதளம்?
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளது. எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா பீச்சர் போன்.
அதேபோல் Unisoc T107 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான பீச்சர் போன்.

2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. அதேபோல் இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

128எம்பி ஸ்டோரேஜ்
48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். மேலும் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

0.3எம்பி கேமரா
இந்த நோக்கியா போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமரா வசதி உள்ளது. ஆனால் இதற்கு பதிலாக ஒரு 5எம்பி கேமராவை கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

புளூடூத் வி4.2
வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். பின்பு எம்பி3 பிளேயர்,புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்.

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கேம் வசதி
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கேம் வசதிகள் இதில் உள்ளன. அதாவது ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

1450 எம்ஏஎச் பேட்டரி
இந்த நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். சார்ஜ் பற்றிய கவலை ஒருபோதும் இருக்காது. மேலும் இந்த புதிய நோக்கியா போனின் எடை 123 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2660 பிளிப் போன் விலை
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, புதிய நோக்கியா 2660 பிளிப் போன் ரூ.4,699-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications