Home
Mobile

கேள்விப்பட்டிருப்பியே என் பேர.. NOKIA மறுபிரவேசம்.. 4G சப்போர்ட்.. 32GB மெமரி.. VGA கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டையே அதிரவிடும் விதமாக நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2660 ஃபிளிப் (Nokia 2660 Flip) போன் 4ஜி சப்போர்ட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் 2 டிஸ்பிளே, 32ஜிபி மெமரி சப்போர்ட், விஜிஏ கேமரா போன்ற பட்டாசான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் போன் என்றாலே, நோக்கியா நிறுவனத்தின் மாடல்களே பலருக்கு நினைவுக்கு வரும். சொல்லப்போனால், இன்றளவும் பழைய நோக்கியா போன்களை தூக்கிப்போடாமல், பத்திரமாக வீட்டில் வைத்திருக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த போன்கள் மீது ஒரு வித ஈர்ப்பும், மறக்க முடியாத நினைவுகளும் அடங்கியிருக்கின்றன.

டிரெண்டே மாறப்போகுது.. 4G சப்போர்ட்.. 32GB மெமரி.. எந்த மாடல்?

இன்றைய காலத்துக்கு ஏற்ப அந்த போன்களின் அம்சங்கள் இல்லாததால், வேறு நிறுவனங்களின் போன்களுக்கு நோக்கியா பிரியர்கள் மாறிவிட்டனர். இந்த நேரத்தில், அவர்களை தட்டித்தூக்கும்படி நோக்கியா நிறுவனம், அந்த கால டிசைனில், இந்த கால அம்சங்களை கொடுத்து பட்டையை கிளப்பும் போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. அந்த வரிசையில், நோக்கியா 2660 ஃபிளிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 2660 ஃபிளிப் போன் அம்சங்கள் (Nokia 2660 Flip Phone Specifications): இந்த நோக்கியா ஃபிளிப் மாடலில் 2.8 இன்ச் (320 x 240 பிக்சல்கள்) கியூவிஜிஏ (QVGA) பிரைமரி டிஸ்பிளே வருகிறது. அதேபோல 1.77 இன்ச் (160 x 128 பிக்சல்கள்) செகண்டரி டிஸ்பிளே (Secondary Display) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செகண்டரி டிஸ்பிளேவானது, போன் ஃபிளிப் செய்யப்பட்ட பின்பு, கவர் பேனலில் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க பயன்படும். ஆகவே, நேரம்,தேதி, எஸ்எம்எஸ் மற்றும் கால், நோட்டிஃபிகேஷன்களை இந்த டிஸ்பிளேவில் பார்த்துக் கொள்ள முடியும். இந்த நோக்கியா போனில் 48 எம்பி ரேம் மற்றும் 128 எம்பி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 32 ஜிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் எல்இடி ஃபிளாஷ் (LED Flash) லைட்டுடன் 0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா வருகிறது. செல்பீ கேமரா கிடையாது. இருப்பினும், செகண்டரி டிஸ்பிளே மூலம் செல்பீ போலவே போட்டோக்களை எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த நோக்கியா ஃபிளிப் போன் எஸ்30பிளஸ் ஓஎஸ் (S30+ OS) கொண்ட யுனிசோக் டி107 சிங்கிள் கோர் எஸ்ஓசி (Unisoc T107 Single-Core SoC) சிப்செட் கொண்டுள்ளது. 2.75W சார்ஜிங் கொண்ட 1,450mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 2ஜியில் பயன்படுத்தினால், 20 மணி நேர பேக்கப் கிடைக்கும். அதேபோல 4ஜியில் பயன்படுத்தினால், 6.5 மணி நேர பேக்கப் கிடைக்கும்.

இந்த பேட்டரிக்கு மைக்ரோ யுஎஸ்பி 2.0 (micro USB 2.0) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2), 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (3.5mm Headphone Jack), வயர்லெஸ் ஃஎப்எம் ரேடியோ (Wireless FM Radio), எம்பி3 பிளேயர் (MP3 Player) போன்ற முக்கிய அம்சங்கள் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஸ்நேக் (Snake), ஏரோ மாஸ்டர் (Arrow Master), டெட்ரிஸ் (Tetris), ஏர் ஸ்டிரைக் (Air Strike) உள்ளிட்ட கேம்களும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் லஸ் கிரீன் (Lush Green) மற்றும் பாப் பிங்க் (Pop Pink) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனை நோக்கியா.காம் (Nokia.com) மற்றும் அமேசான் (Amazon) தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

இதன் விற்பனை நாளை (ஆகஸ்ட் 24) முதல் தொடங்குகிறது. இந்த நோக்கியா 2660 ஃபிளிப் போனின் விலை ரூ. 4,699ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜி சப்போர்ட் இருப்பதால், இன்றைய காலத்துக்கு பொருத்தமான போனாக இருக்கும். ஆகவே, விற்பனையில் நல்ல வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 2660 Flip Phone Specifications, Price With Pop Pink and Lush Green Color Variants in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X