இப்படிவொரு Nokia போன் வாங்கிட்டா போதும்.. வேற போனே வேண்டாம்.. டூயல் ஸ்கிரீன், 4G சிம்னு அவ்வளவு இருக்கு!
நோக்கியா (Nokia) ஃபிளிப் போன்களிலேயே மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நோக்கியா 2660 ஃபிளிப் போன் (Nokia 2660 Flip Phone) டூயல் ஸ்கிரீன் (Dual Screen), 4G சிம், 32 ஜிபி ஸ்டோரேஜ் என்று இன்றைய காலத்துக்கு தேவையான அம்சங்களுடன் அறிமுகமாகியிருக்கிறது.
இப்போது, மார்க்கெட்டில் வரும் போன்கள், தவறுதலாக கீழே விழுந்துவிட்டால் போதும், "கதை முடிந்தது" வேறு போன் வாங்கி வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விடுகிறார்கள். ஏனென்றால், அந்த போன்களில் உடைந்தபோன டிஸ்பிளேவை மாற்ற வேண்டும் என்றாலே, போனின் பாதிக்குப்பாதி விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

இதற்கு புதுப்போனே வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலைமைக்கு இப்போது வந்துவிட்டனர். ஆனால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்பு, மக்கள் பயன்படுத்திய பீச்சர் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாமல் தரமாக இருக்கும். அதிலும் நோக்கியா, மோட்ரோலா போன்களை மாடியில் இருந்து கீழே போட்டாலும் உடையாமல், கல் மாதிரி இருக்கும்.
குறிப்பாக, நோக்கியா போன்கள் தரத்துக்கு பெயர் பெற்றவை. சொல்லப்போனால், இன்றளவும் இந்த நோக்கியா போன்கள் மீதான மதிப்பும், ஆர்வமும் அதன் பயனர்களுக்கு துளியும் குறையவில்லை. இதனாலேயே நோக்கிய நிறுவனம், பீச்சர் போன்களில் 4ஜி சிம் சப்போர்ட், அதிகப்படியான ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை வழங்கி, மீண்டும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நோக்கியா 2660 ஃபிளிப் போன் இப்பேது, மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா 2660 ஃபிளிப் போன் அம்சங்கள்: இந்த நோக்கியா போன் 2.8 இன்ச் கியூவிஜிஏ (QVGA) பிரைமரி டிஸ்பிளே மற்றும் 1.77 இன்ச் செகண்டரி டிஸ்பிளே (Secondary Display) கொண்டுள்ளது. இந்த செகண்டரி டிஸ்பிளே கவர் பேனலில் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் நேரம், தேதி மற்றும் நோட்டிஃபிகேஷன்களை பார்த்துக்கொள்ள முடியும். 0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா வருகிறது. அதோடு எல்இடி ஃபிளாஷ் (LED Flash) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா 2660 ஃபிளிப் போன் எஸ்30பிளஸ் (S30+) ஓஎஸ் உடன் யுனிசோக்டி107 எஸ்ஓசி (UnisocT107 SoC) சிப்செட் கொண்டுள்ளது. 48 எம்பி ரேம் 128 எம்பி ஸ்டோரேஜ் வசதி வருகிறது. இந்த போனில் 32 ஜிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். 2.75W சார்ஜிங் திறன் கொண்ட 1,450mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி 2.0 சார்ஜிங் போர்ட் உள்ளது. ப்ளூடூத் வசிதி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதில் ஒரு 4ஜி சிம் சப்போர்ட் உள்ளது. ஃஎப்எம் ரோடியோ மற்றும் எம்பி3 பிளோயர் சப்போர்ட் இருக்கிறது. நோக்கியா போன்களுக்கு என்றே பெயர்பெற்ற ஸ்நேக் (Snake), டெட்ரிஸ் (Tetris), ஏரோ மாஸ்டர் (Arrow Master), ஏர் ஸ்டிரைக் (Air Strike) உள்ளிட்ட கேம்கள் உள்ளன.
இந்த போன் முதலில் பிளாக் (Black), கிரீன் (Blue), ரெட் (Red) ஆகிய மூன்று கலர்களில் அறிமுகமானது. இப்போது, லஸ் கிரீன் (Lush Green) மற்றும் பாப் பிங்க் (Pop Pink) ஆகிய இரண்டு கலர்களில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு டிசைனில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முன்பு இருந்ததைவிட பெரிதாக பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போனின் விலையில் பொறுத்தவரையில், ரூ. 4,699ஆக உள்ளது. இருப்பினும், புதியாக அறிமுகம் செய்யப்பட்ட கலர்களில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications