நோக்கியாவுக்கு கும்பிடு.. இனி இந்த போனில் ஸ்கேன் பண்ணுங்க.. பணத்தை அனுப்புங்க.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் தனது நோக்கியா 2660 பிளிப் போனை கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன் தற்போது பாப் பிங்க் மற்றும் லஷ் கிரீன் நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் நோக்கியா 2660 பிளிப் போனுக்கு ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளதாக எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது..
அதாவது இன்று நோக்கியா 2660 பிளிப் போனுக்கு யுபிஐ ஸ்கேன் (UPI Scan) மற்றும் பே (Pay) பே செயல்பாடுகளைச் சேர்த்துள்ளதாக எச்எம்டி நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த போனில் உள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் பயனர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். குறிப்பாக மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டு இந்த டிஜிட்டல் பேமெண்ட் சேர்க்கையை உறுதி செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா 2660 பிளிப் போன் 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது. கண்டிப்பாக இந்த போன் ஒரு சிறந்த டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும். கண்டிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளது.
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது எமர்ஜென்சி பட்டன் (emergency button) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் அவசரக்காலத்தில் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விரைவாக தொடர்பு கொள்ளமுடியும். குறிப்பாக அவசரக்காலத்தில் தொடர்புகொள்வதற்காக 5 போன் எண்களைச் சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் யுனிசாக் டி107 (Unisoc T107) பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
நோக்கியா 2660 பிளிப் போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமரா வசதி உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதுபோன்ற கேமரா பயன் கொடுக்காது. இதற்குப் பதிலாக ஒரு 5எம்பி கேமராவை கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 2660 பிளிப் போன்.
மேலும் கூடுதலாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கியா போனில் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ வசதி உள்ளது. பின்பு எம்பி3 பிளேயர், புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். கண்டிப்பாக இந்த கேம் வசதிகள் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.அதேபோல் இந்த போன் VoLTE ஆதரவுடன் டூயல் 4G கனெக்ஷனை வழங்கும்.
அமேசானில் நோக்கியா 2660 பிளிப் (Nokia 2660 Flip) போனின் விலை ரூ.4,499-ஆக உள்ளது. அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் வரும் மாதங்களில் பல அசத்தலான நோக்கியா 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








