Home
Mobile

நச்சுனு செஞ்சுவிட்ட Nokia.. ரூ.4000 விலைல.. 2 டிஸ்பிளேவுடன் ஃபிலிப் Mobile.. ஆஃபர்ல உடனே யோசிக்காம வாங்குங்க..

நோக்கியா (Nokia) நிறுவனம் அதன் மொபைல் போன் வரிசையில் அறிமுகம் செய்த ஒரு புதிய சாதனம் தான் இந்த நோக்கியா 2660 ஃபிலிப் (Nokia 2660 Flip) என்ற மொபைல் சாதனம். சாமானியர்களின் கனவு போனாக இந்த மொபைல் பார்க்கப்படுகிறது. காரணம், வெறும் 4000 ரூபாய் விலை புள்ளியில், இந்த மொபைல் சாதனம், இந்த காலத்திற்கு ஏற்றார் போன்ற அம்சங்களை அடக்கியுள்ளது. இதில் சிங்கிள் டச் எமெர்ஜென்சி கால்ஸ், UPI பேமெண்ட் அம்சம், கேமரா, டூயல் டிஸ்பிளே, FM போன்ற பல அம்சங்களை நிறுவனம் பேக் செய்துள்ளது.

இந்த நோக்கியா 2660 ஃபிலிப் (Nokia 2660 Flip) மொபைல் சாதனம் கைக்கு அடக்கமான அளவில், ஒரு சூப்பர் சாதனமாக வெளிவந்துள்ளது. இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் ரெட்ரோ ஸ்டைலுடன், புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இதில் புகுத்தி, ஒரு சிறந்த கிளாம்ஷெல் ஃபிலிப் மொபைல் போனாக (retro-styled clamshell mobile phone) உருவாக்கியுள்ளது.

நச்சுனு செஞ்சுவிட்ட Nokia.. ரூ.4000 விலைல.. 2 டிஸ்பிளேவுடன் Mobile..

நச்சுனு செஞ்சுவிட்ட Nokia.. ரூ.4000 விலையில்.. 2 டிஸ்பிளேவுடன் Nokia 2660 Flip 4G Mobile:

இந்த 2024 ஆம் ஆண்டில் மிகவும் ஸ்டைலான பியூச்சர் போன் என்ற பெருமையை இந்த மொபைல் பெற்றுள்ளது.இந்த புதிய நோக்கியா 2660 ஃபிலிப் 4ஜி வோல்ட்இ கீபேட் போன் (Nokia 2660 Flip 4G Volte keypad Phone) சாதனம் பிளாக் (Black), ரெட் (Red), ப்ளூ (Blue), பாப் பிங்க் (Pop Pink), மாறும் லஷ் க்ரீன் (Lush Green) ஆகிய நிறங்களில் இப்போது வாங்க கிடைக்கிறது.

இதன் அசல் விலை ரூ. 5,899 என்றாலும், இந்த சாதனம் தற்போது அமேசான் இந்தியா தளம் வழியாக 27% சலுகையுடன் மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த அட்டகாசமான மற்றும் அழகான நோக்கியா 2660 ஃபிலிப் மொபைல் சாதனம் இப்போது சலுகைக்கு பிறகு ரூ. 4,299 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இது ஒரு அட்டகாசமான விலை மக்களே.

நோக்கியா 2660 ஃபிலிப் 4ஜி வோல்ட்இ கீபேட் போன் (Nokia 2660 Flip 4G Volte keypad Phone):

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் இதை பயன்படுத்தலாம். அல்லது உங்கள் தேவைக்கேற்ற பெஸ்டான செகண்டரி போனாக இந்த போனை நீங்கள் தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம்.இதில் UPI ஸ்கேன் மற்றும் பேமெண்ட் சேவை இணக்கமானது என்பதனால், உங்களால் நொடியில் டிஜிட்டல் பேமெண்ட் செய்திட முடியும். இந்த காலத்திற்கு ஏற்ற ஒரு முக்கியமான அம்சமாக இந்த போனின் அம்சங்கள் பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலை வாங்க EMI விருப்பமும் உள்ளது. அதேபோல், இந்த போனை வாங்க நோ-காஸ்ட் EMI வசதியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபோனுக்கான EMI ரூ. 208 விலை முதல் துவங்குகிறது. இதன் நோ-காஸ்ட் EMI கட்டணம் மாதத்திற்கு ரூ.717 விலை முதல் தொடங்குகிறது. வெறும் 208 ரூபாய் செலவில் இந்த போனை வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.

நோக்கியா 2660 ஃபிலிப் சிறப்பம்சம் (Nokia 2660 Flip Specifications):

இந்த நோக்கியா 2660 ஃபிலிப் 4ஜி வோல்டி கீபேட் போன் (Nokia 2660 Flip 4G Volte keypad Phone) சாதனம் 2.8' இன்ச் TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் நவிகேஷன் செய்ய மற்றும் மற்ற அம்சங்களை அணுக பெரிய சைஸ் எர்கோனோமிக் பட்டன்கள் (ergonomic buttons) வழங்கப்பட்டுள்ளன.இந்த ஃபோனின் ஃபிலிப் பன்க்ஷனாலிட்டி (Flip-Functionality) அம்சம் ஆனது, ஒரு எளிய ஃபிளிப் மூலம் வாய்ஸ் கால்ஸ் அழைப்பிற்கு பதிலளிக்கவும், கால்களை கட் செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த ஃபோன் Nokia Series 30+ இல் இயங்குகிறது மற்றும் 4G ஐ ஆதரிக்கிறது. இந்த போனில் லித்தியம் அயன் (Lithium Ion) 1450mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது போனை 2 நாளுக்கு மேல் பயன்பாட்டில் வைக்கிறது. இந்த ஃபோன் 48MB ரேம் (RAM) மற்றும் 128MB இன்பில்ட் மெமரியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்கு நீங்கள் 32GB வரையிலான மைக்ரோஎஸ்டி (microSD card) பயன்படுத்தலாம்.

இதில் ஒரு 5MP கேமராவும் (camera) உள்ளது. இதில் MP3 பிளேயர் மற்றும் FM வயர்லெஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. இந்த Nokia 2660 Flip 4G போன் தற்போது அமேசான் தளம் தவிர, பிளிப்கார்ட், HMD அதிகாரப்பூர்வ வலைத்தளம் போன்றவற்றில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 2660 Flip 4G Volte keypad Phone with Dual Screen Inbuilt MP3 Player & FM Radio Price Rs 4299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X