அதிர போகுது மார்க்கெட்.. IP54 ரேட்டிங்.. AI அம்சங்கள்.. புதிய நோக்கியா 4ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் (Nokia 250 4G Smart) எனும் போனை எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் முதலில் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட நாடுகளிலும் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் அம்சங்கள் (Nokia 250 4G Smart Specifications): 2.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கம் இந்த நோக்கியா போனின் டிஸ்பிளே.
ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 2எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடல். எனவே இந்த போனின் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் 0.3எம்பி செல்பி கேமரா வசதியும் இந்த புதிய நோக்கியா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 dust and splash resistance) உடன் இந்த நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
தரமான யுனிசார் டி137 பிராசரஸ் (Unisoc T137 processor) உடன் நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ரியல்-டைம் இயங்குதளத்தை (real-time operating system) அடிப்படையாகக் கொண்டு
இந்த சாதனம் வெளியாகி உள்ளது.
ஒரு ஃபீச்சர் போனாக இருந்தாலும் பல ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது AI அம்சங்கள், QR ரீடர், வாய்ஸ் டிரான்ஸ்லேஷன் (voice translation) போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் இந்த நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடலில் உள்ளன. எனவே இது ஸ்மார்ட்போன் போன்ற அனுபவத்தை தரும்.
256எம்பி ரேம் மற்றும் 2ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா போன். அதேபோல் 1950mAh பேட்டரி உடன் நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், எப்எம் ரேடியோ, டூயல் எல்டிஇ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய நோக்கியா போனில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த புதிய நோக்கியா போனில் உள்ளன.
ஆனால் நோக்கியா 250 4ஜி ஸ்மார்ட் மாடலின் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த போனின் விரைவில் வெளியாகும், அப்போது அப்டேட் செய்கிறோம்.
photo credits: smashx_60, gizmochina, HMD_MEME'S


Click it and Unblock the Notifications