Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் அதிருது..15 நாட்கள் பேட்டரி.. 2 டிஸ்பிளே.. புது Nokia பீச்சர் போன்.. எந்த மாடல்?

எச்எம்டி நிறுவனம் புதிய நோக்கியா 2360 பிளிப் (Nokia 2360 Flip) பீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்புடன் இந்த புதிய நோக்கியா போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த நோக்கியா 2360 பிளிப் மாடலின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நோக்கியா 2360 பிளிப் அம்சங்கள் (Nokia 2360 Flip Specifications): புதிய நோக்கியா 2360 பிளிப் மொபைல் ஆனது பள்ளி மாணவர்கள் மற்றும் வயதானவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள Family Assist வசதி மூலம், குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஸ்மார்ட்போன் வழியாகவே இந்த போனை எளிதாக செட்டப் செய்து, அதன் செயல்பாடுகளையும் நிர்வகிக்க முடியும்.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் அதிருது.. புது Nokia பீச்சர் போன்..

ஆனால் புதிய நோக்கியா 2360 பிளிப் மாடல் ஆனது 2G GSM நெட்வொர்க்கில் மட்டுமே (900/1800MHz) செயல்படும். பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 2G சேவையை நிறுத்தியுள்ளதால், இந்த போனைப் பயன்படுத்த முடியுமா என்பது நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்தே அமையும்.

குறிப்பாக நோக்கியா 2360 பிளிப் போனை Family Assist செயலி மூலம் எளிதாக நிர்வகிக்கலாம். இந்த செயலியை Google Play Store மற்றும் Apple App Store-ல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே Nokia 2360 Flip போனைத் தொலைவில் இருந்தபடி செட்டப் செய்யலாம். இந்த செயலி SMS மூலம் போனுடன் தொடர்புகொள்வதால், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இன்டர்நெட் டேட்டா வசதி தேவையில்லை.

மேலும் இந்த நோக்கியா போனில் தொடர்பு எண்களைச் சேர்ப்பது, நினைவூட்டல்களை அமைப்பது, வால்யூமைக் கட்டுப்படுத்துவது மற்றும் SOS பட்டனை அமைப்பது போன்றவற்றைச் செய்யலாம். புதிதாக மருத்துவரின் எண் அல்லது வேறு தொடர்பு எண்ணைச் சேர்க்க வேண்டியிருந்தாலும், எங்கிருந்தபடியும் ஸ்மார்ட்போன் மூலம் எளிதாக மாற்றங்களைச் செய்ய முடியும்.

இந்த நோக்கியா 2360 பிளிப் போனில் அவசர கால உதவிக்காகத் தனியாக SOS பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை தொடர்ந்து 3 விநாடிகள் அழுத்தினால், ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு செல்லும். அதே நேரத்தில், அதிகபட்சம் 5 அவசரகாலத் தொடர்பு எண்களுக்கு SMS மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். யாருக்கெல்லாம் இந்தத் தகவல் செல்ல வேண்டும், அதில் என்ன செய்தி இடம்பெற வேண்டும் என்பதையும் Family Assist செயலி மூலம் பயனர்கள் தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான முதல் மொபைல் போனாகவும் நோக்கியா 2360 பிளிப் மாடலை HMD நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள கட்டுப்பாட்டு வசதிகளை Family PIN மூலம் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ளலாம். இதற்காக Family Assist செயலியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதில் உள்ள School Mode வசதியை இயக்கினால், கடிகாரம் மற்றும் அவசரகால அழைப்புகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் அனுமதிக்கப்பட்ட தொடர்பு எண்களுடன் மட்டுமே அழைப்புகள் மற்றும் SMS அனுப்பும் வகையில் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். கேமரா, கேம்ஸ் போன்ற குறிப்பிட்ட வசதிகளையும் தேவைக்கேற்ப தனித்தனியாக முடக்க முடியும். இதன் மூலம் குழந்தைகள் மொபைலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் எளிதாகக் கட்டுப்படுத்தலாம்

நோக்கியா 2360 பிளிப் போனில் 2.8 இன்ச் QVGA அளவிலான பிரைமரி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் மெனு ஐகான்கள் பெரிய அளவில் இருப்பதால், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். மேலும், போனின் வெளிப்புறத்தில் 1.77 இன்ச் QQVGA டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன் பில்ட் வுட்ஸ்பீக்கர் வசதியும் இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் அதிருது.. புது Nokia பீச்சர் போன்..

நோக்கியா 2360 பிளிப் போனில் 1,450mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியைத் தேவையான நேரத்தில் கழற்றி மாற்றிக்கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 15 நாட்கள் ஸ்டாண்ட்பை நேரத்தையும், தொடர்ந்து பேசும்போது 27.5 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப்பையும் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஃபிளிப் போன் Charcoal, Burgundy Red மற்றும் Teal ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

அதேபோல் நோக்கியா 2360 பிளிப் போனின் விலை மற்றும் எந்தெந்த நாடுகளில் விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல்களை HMD நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும். மேலும், இந்த போனில் Google Maps, YouTube போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை.

Best Mobiles in India

English summary
Nokia 2360 Flip With 1450mAh Battery dual display Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X