யாரு சாமி அவன்.. முழுசா வேற மாறி நோக்கியா.. VGA கேமரா.. 128MB மெமரி.. பெசல் டிசைன்.. எந்த மாடல்?
நோக்கியா பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக 2.8 இன்ச் டிஸ்பிளே, எஸ்30பிளஸ் ஓஎஸ், விஜிஏ கேமரா, 128எம்பி மெமரி, டைப்-சி சார்ஜிங், 1450mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பழைய பில்ட்-குவாலிட்டியுடன் நோக்கியா 225 4ஜி 2024 மாடல் வெளியாகிறது.
இந்த போனின் முந்தைய மாடலை போலல்லாமல், டிசைன், கலர் மற்றும் கனெக்டிவிட்டியில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த நோக்கியா 225 4ஜி 2024 (Nokia 225 4G 2024) போன் எப்போது வெளியாகிறது, விலை எப்படி இருக்கும், என்னென்ன பீச்சர்கள் வருகின்றன ஆகிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நோக்கியா 225 4ஜி 2024 அம்சங்கள் (Nokia 225 4G 2024 Specifications): இந்த நோக்கியாவில் 2.8 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. பெசல் டிசைன் (Bezels Design) மற்றும் ஸ்டான்டர்ட் பீச்சர் போன் கீபேட் (Standard Feature Phone Keypad) கொண்டிருக்கிறது. பிங்க் (Pink), ஆரஞ்ச் (Orange), கிரீன் (Green) மற்றும் லைட் ப்ளூ (Lite Blue) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.
பிரீமியம் லுக்கில் பின்னெப்பெடல் எடுக்கிறது. இதற்கு முந்தைய வெர்ஷனில் வந்த சார்ஜிங் போர்ட் இந்த வெர்ஷனில் கிடையாது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 1450mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பீச்சர் மாடல்களில் வரும் நீட்ட பேட்டரி பேக்கப் இதில் கிடைக்கும். 7 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம்.
இந்த நோக்கியா 225 4ஜி 2024 போனில் 64 எம்பி ரேம், 128 எம்பி மெமரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் (Nokia Series 30+) ஓஎஸ் வருகிறது. ஆகவே, சோஷியல் மீடியா ஆப்ஸ் வருவது சந்தேகம்தான். இருப்பினும், யூடியூப் இருக்க வாய்ப்புள்ளது.

3 எம்பி விஜிஏ மெயின் கேமரா + 0.8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கொண்டிருக்கிறது. இந்த நோக்கியா 225 4ஜி 2024 போனில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல 4ஜி வோஎல்டிஇ (VoLTE) சப்போர்ட் மற்றும் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொண்டிருக்கிறது.
இந்த நோக்கியா 225 4ஜி 2024 போன் சீனா மற்றும் கென்யாவில் முதலில் வெளியாகிறது. அதன் பிறகு அடுத்தடுத்த நாடுகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு முந்தைய மாடலானது, இந்திய மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. அந்த போனின் விலை ரூ.3,449ஆக இருக்கிறது.
ஆகவே, இந்த 2024 வெர்ஷனின் விலை பொறுத்தவரை ரூ.4000 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த போனில் கிளாசிக் கேம்கள் (Classic Games), வெப் பிரவுசர் (Web Browser), எம்பி3 பிளேயர் (Mp3 Player)போன்ற வழக்கமாக பீச்சர் போன் அம்சங்கள் வர இருக்கிறது. இந்த மாடல் சீனாவிலும் அதற்கு அடுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்மார்ட் ஆப்கள் மற்றும் பீச்சர்கள் தேவைப்படாமல், கால்களுக்கு மட்டுமே பயன்படுத்த போன் வேண்டும் அல்லது பக்கா குவாலிட்டியில் பீச்சர் போன் வேண்டும் என்று கேட்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த நோக்கியா 225 4ஜி 2024 மாடலானது, டாப் ஆப்ஷனாக இருக்கும். அதோடு பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது.
Image Source - nokiamob.net


Click it and Unblock the Notifications