வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. குறைந்த விலையில் நோக்கியா 4ஜி போன்.. எந்த மாடல்?
சாதாரண பீச்சர் போன்களை பயன்படுத்துவதை விட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதால் சீக்கிரம் சார்ஜ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது.
எனவே ஸ்மார்ட்போன் உடன் பீச்சர் போனையும் வாங்கி பயன்படுத்துவது நல்லது. அவசர காலத்தில் அல்லது பயணங்களில் ஸ்மார்ட்போனை விட இந்த பீச்சர் போன் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். யுபிஐ பேமேண்ட், அவசர அழைப்புகள் என அனைத்திற்கு இதுபோன்ற பீச்சர் போன்கள் கண்டிப்பாகப் பயன்படும்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் நோக்கியா 225 4ஜி 2024 (Nokia 225 4G 2024) மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்நிலையில் இந்த புதிய போனின் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன. அதன்படி இந்த நோக்கியா 225 4ஜி 2024 போனின் பின்புறம் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட சிங்கிள் ரியர் கேமரா உள்ளது.
அதேபோல் பிங்க் மற்றும் கிரீன் நிறங்களில் இந்த அசத்தலான நோக்கியா 225 4ஜி 2024 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய நோக்கியா போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த நோக்கியா 225 4ஜி 2024 போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நோக்கியா 225 4ஜி 2024 அம்சங்கள் (Nokia 225 4G 2024 specifications): 2.4-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த நோக்கியா 225 4ஜி 2024 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் கலர் டிஸ்பிளேவில் பல அசத்தலான அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.
அதேபோல் நோக்கியா 225 4ஜி 2024 போனின் பின்புறம் விஜிஏ கேமரா அல்லது 3எம்பி சென்சார் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே யுபிஐ ஸ்கேன் செய்வதற்கு இந்த போனின் கேமரா பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்த போனில் எல்இடி பிளாஷ் ஆதரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக Series 30+ இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா 225 4ஜி 2024 போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பீச்சர்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பினபு இந்த போனில் 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன் பில்ட் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

புதிய நோக்கியா 225 4ஜி 2024 மாடல் ஆனது டி9 கீபோர்டு (T9 keyboard) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவுடன் இந்த அசத்தலான நோக்கியா 225 4ஜி 2023 மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1450எம்ஏஎச் பேட்டரி உடன் நோக்கியா 225 4ஜி 2024 போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 225 4ஜி 2024 மாடல் ஆனது இந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Android Headlines/ @OnLeaks


Click it and Unblock the Notifications