கம்மி விலையில் அட்டகாச நோக்கியா 220 4ஜி போன் அறிமுகம்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய நோக்கியா 220 4ஜி போனின் விலை இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.3,201-ஆக உள்ளது.

இந்திய விற்பனை

குறிப்பாக இந்த புதிய பீச்சர் போன் மாடல் வரும் மே மாதம் 7-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த சாதனத்தின் இந்திய விற்பனை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 கருப்பு மற்றும் நீல நிறத்தில் வாங்க கிடைக்கும்

இந்த நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் மாடல் 4ஜி நெட்வொர்க் மற்றும் VoLTE ஹை-டெபினிஷன் அழைப்புகளுக்கான ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த சாதனம் கிளாசிக் பாலிகார்பனேட் பாடியை கொண்டுள்ளது மற்றும் இது கருப்பு மற்றும் நீல நிறத்தில் வாங்க கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronalockdown: ஆன்லைன் விளையாட்டில் மனைவி தொடர் வெற்றி., முதுகு எலும்பை உடைத்த கணவர்!

நோக்கியா 220 4ஜி பீச்சர் போன்

நோக்கியா 220 4ஜி பீச்சர் போன் 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் இந்த சாதனம் 0.3எம்பி மெகாபிக்சல் விஜிஏ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவும் இவற்றுள் அடக்கம்.

 3ஜி நெட்வொர்க்கிற்கு

இந்த புதிய நோக்கியா சாதனத்தில் பீச்சர் ஓஎஸ், ப்ளூடூத் 4.2 இணைப்பு, 16எம்பி ரேம் மற்றும் 24எம்பி மெமரி உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போன் 3ஜி நெட்வொர்க்கிற்கு ஆதரவை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 எச்எம்டி குளோபல்

நோக்கியா 220 4ஜி பீச்சர் சாதனத்தில் 1200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே 6 மணி நேரத்திற்கும் மேலான பேச்சு நேரத்தையும் 27 நாட்கள் காத்திருப்பு நேரத்தையும் வழங்க முடியும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும்

நோக்கியா 220 4ஜி பீச்சர் மாடலில் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் இண்டர்நெட் ப்ரவுஸர் உள்ளிட்ட ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இது எம்பி 3 பிளேயர், ஹேண்ட்ஸ் ஃப்ரீ எஃப்எம் ரேடியோ மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுக்கும் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே மற்றும்

மேலும் கடந்த மாதம் இந்நிறுவனம் நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்தது, இது நோக்கியா 1 தொடரின் கீழ் வெளியான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். பின்பு இந்த நோக்கியா 1.3 சாதனம் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் இதன் பின்புறம் மற்றும் முன்புறம் ஒற்றை கேமரா வசதிகள் உள்ளது.

கியூஎம் 215 ப்ராசஸர்

அதன்படி நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா உள்ளது, மேலும் க்வால்காம் கியூஎம் 215 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனில்

குறிப்பாக இந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) போன்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.7,600-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 220 4G Phone Launched: Price, Specs and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X