4ஜி வசதி கொண்ட நோக்கியா பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்.! குறைந்த விலை.!

|

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல்களை வோல்ட்இ வசதியுடன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்

நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி பீச்சர் போன் மாடல்களின் அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரயாக தான் இருக்கிறது. ஆனால் நோக்கியா 225 4ஜி பீச்சர் மாடலின் பின்புறம் ஒரு விஜிஏ கேமரா வழங்கப்பட்டுள்ளது, நோக்கியா 215 4ஜி மாடலில் எந்த கேமரா வசதியும் இடம்பெறவில்லை அவ்வளவுதான்.

QVGA LCD டிஸ்பிளே வசதி

QVGA LCD டிஸ்பிளே வசதி

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களில் 2.4இன்ச் QVGA LCD டிஸ்பிளே வசதி மற்றும்320x240 பிக்சல் வசதி உள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த சாதனங்கள்.

Tecno Camon 16 ஸ்மார்ட்போன் நம்பமுடியாத மலிவு விலையில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

பீச்சர் ஒஎஸ்

பீச்சர் ஒஎஸ்

இந்த இரண்டு சாதனங்களிலும் 1ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர் வசதி இடம்பெற்றள்ளது, மேலும் பீச்சர் ஒஎஸ் கொண்டு இந்த நோக்கியா சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மாடல்களில் வெப்

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களில் வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

128எம்பி மெமரி வசதி

128எம்பி மெமரி வசதி

இந்த நோக்கியா பீச்சர் போன் மாடல்களில் 64எம்பி ரேம் வசதி மற்றும் 128எம்பி மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதாவது நீங்கள் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அவுங்களுக்கு அதான் வேணும்னா அப்டியே பண்ணலாம்: மைக்ரோசாஃப்ட் அட்டகாச அறிவிப்பு!

1800எம்ஏஎச் பேட்டரி

1800எம்ஏஎச் பேட்டரி

இந்த இரண்டு நோக்கியா சாதனங்களிலும் 1200எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே கால் அழைப்புகள், எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த வசதியாக இருக்கும். இருந்தபோதிலும் 1800எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்திருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும்.

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களின் விலை

நோக்கியா 215 மற்றும் 225 4ஜி மாடல்களின் விலை

குறிப்பாக நோக்கியா 215 4ஜி மாடல் டர்குயிஸ் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது,இதன் விலை 43 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.3,151 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு நோக்கியா 225 4ஜி மாடல் ஆனது கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது, ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 215, Nokia 225 Feature Phones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X