4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.!
சமீத்தில் வெளியான பீச்சர் மொபைல்களை போலவே இந்த மொபைலும் ஒரு மேம்பட்ட வடிவமைப்பு, ஒரு கலர் டிஸ்பிளே, மற்றும் 4ஜி எல்டிஇ இணைப்பு ஆதரவு ஆகியவைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தின் கிளாசிக் மொபைல்களான நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 8110 பனானா ஆகியவைகளின் அப்டேட்டட் பதிப்பை வெளியிட்டதை தொடர்ந்து மேலும் இரண்டு கிளாசிக் மொபைல்களின் புதிய பதிப்பு மீதான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நோக்கியா 2010 மொபைலின் சீரமைக்கப்பட்ட பதிப்பு அதன் 25 வது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில் வெளியாகும், அதாவது அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

சமீத்தில் வெளியான பீச்சர் மொபைல்களை போலவே இந்த மொபைலும் ஒரு மேம்பட்ட வடிவமைப்பு, ஒரு கலர் டிஸ்பிளே, மற்றும் 4ஜி எல்டிஇ இணைப்பு ஆதரவு ஆகியவைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான புதிய நோக்கியா 8110 எங்கெல்லாம் கிடைக்கிறதோ, அதே சந்தைகளில் மட்டும் தான் நோக்கியா 2010 மொபைலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நோக்கியா 2010 ஆனதும், நோக்கியா 8110-ல் கிடைத்த அதே ஓஎஸ் கொண்டு தான் இயங்கும். இருப்பினும், வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்ற பயன்பாடுகளுக்கான ஆதரவும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் ஒரு புதிய பெயரை கொண்டு அதாவது நோக்கியா ஏ10 அல்லது வேறு ஏதேனும் ஒரு பெயரில் வெளியாகவும் வாய்ப்புள்ளது. சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு போன்ற கவர்ச்சிகரமான நிறங்களில் வெளியாகும்.
இவைகளை தவிர இந்த மொபைல் பற்றிய இதர அம்சங்கள் பற்றிய எந்த வார்த்தைகளும் இல்லை. மேலும், கூறப்படும் நோக்கியா ஏ10 ஆனது எப்போது வெளியாகும் என்ற விவரமும் கிடையாது. இது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்வில் வெளியாக வாய்ப்புள்ளது. அதாவது இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2018-ல் நோக்கியா 8110 வெளியானது போல.!


Click it and Unblock the Notifications