அறிமுகம் : சூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2.!

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவியில் கூகுள் அசிஸ்டண்ட் அணுகல் உள்ளது.

|

நோக்கியா பிராண்டிற்கு இந்தியா ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இந்தாண்டு இறுதிக்குள் சுமார் 100,000 கடைகளில் நோக்கியா போன்களை விற்பனை செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது என்பதே அதற்கு சாட்சி. அந்த அளவிலான நம்பகமான ரசிகர்களை கொண்டுள்ள நோக்கியா அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரிசையில் மேலுமொரு சூப்பர் பட்ஜெட் கருவியை, அட்டகாசமான அம்சங்களுடன் களமிறக்கியுள்ளது.

அறிமுகம் : சூப்பர் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் நோக்கியா 2

ஆம், எதிர்பார்த்தபடியே எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து நுழைவு நிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2 இன்று (செவ்வாய்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் "2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்" தான். அதாவது, நோக்கியா கருவிகளின் பேட்டரித்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு 4100எம்ஏஎச் பேட்டரியை நோக்கியா 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

பாலிகார்பனேட் கொண்டு வெளியே கட்டப்பட்டுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு சிறப்பம்சமாக அதன் 6000 தொடர் அலுமினியம் சட்டம் திகழ்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 1: 1300 கான்ட்ராஸ்ட்ரேஷன் விகிதம் கொண்ட 5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவியில் கூகுள் அசிஸ்டண்ட் அணுகல் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 2 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறுமென உறுதியாக நம்பலாம். உடன் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 எஸ்ஓசி (க்வாட்-கோர், 1.2ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் 1 ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஸ்டாண்டார்ட் ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.

8 ஜிபி  + 128  ஜிபி.!

8 ஜிபி + 128 ஜிபி.!

சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், 8 ஜிபி அளவிலான உஉள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்கும். இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 2 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், ஆர்டிஸ், மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

நவம்பர் நடுப்பகுதியில் இருந்து நோக்கியா 2 ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு கிடைக்கும். மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில் - பிளாக் முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் பிளாக், வெள்ளை முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் வெள்ளை மற்றும் பிளாக் பின்புறம், வெள்ளை முன்பக்கம், காப்பர் ப்ரேம் உடனான காப்பர் - வெளியாகிறது.

ட்ரிப் ப்ரொடெக்ஷன்அதாவது சொட்டு நீர் பாதுகாப்பு

ட்ரிப் ப்ரொடெக்ஷன்அதாவது சொட்டு நீர் பாதுகாப்பு

சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் நோக்கியா 2 ஆனது 143.5x71.3x9.3 மிமீ கொண்டுள்ளது மற்றும் ஐபி52 (ட்ரிப் அதாவது சொட்டு நீர்) பாதுகாப்பும் கொண்டுள்ளது.

சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.!

சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.!

இப்போது வரை, ​​நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இருப்பினும்,எச்எம்டி க்ளோபல்உ நிறுவனத்தின் உலகளாவிய விலைப்புள்ளியை வைத்து பார்க்கும் போது, இது சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 2 launched in India, will be available from mid-November. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X