4 மாறுபாடுகளில் நோக்கியா 2 ஆண்ட்ராய்டு வெளிவருகிறது, என்னென்ன அம்சங்கள்.?

|

நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள க்ளோபல் எச்எம்டி நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவுள்ள நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 மாறுபாடுகளில் நோக்கியா 2 ஆண்ட்ராய்டு வெளிவருகிறது (அம்சங்கள்)

சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கையின் படி, நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் நான்கு மாறுபாடுகளுக்கும் அமெரிக்க எப்சிசி தளத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அறிவிக்கிறது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி லண்டனில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த எச்எம்டி க்ளோபல் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் நிறுவனம் அதன் அடுத்தடுத்து வரும் நோக்கியா ஸ்மார்ட்போகளின் வரிசைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் நான்கு மாறுபாடு

மொத்தம் நான்கு மாறுபாடு

டிஏ-1029, டிஏ-1007, டிஏ-1035, டிஏ-1023 என்ற பெயர்களில் மொத்தம் நான்கு மாறுபாடுகளில் எப்சிசி வலைத்தளத்தில் காணப்பட்டுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களின் வித்தியாசங்களை பொறுத்தமட்டில் ஒற்றை சிம் / இரட்டை சிம், எல்டிஇ பேண்ட் ஆதரவு ஆகியவைகளில் இருக்கலாம்.

ஒற்றை சிம்

ஒற்றை சிம்

மேலும் வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று இந்த ஸ்மார்ட்போன்கள் நிறுவனத்தினால் வெளியிடப்படலாமென்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நோக்கியா பவர் யூசர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி டிஏ -1029 ஆனது நோக்கியா 2 சாதனத்தின் இரட்டை சிம் பதிப்பாக இருக்கும் மற்றும் டிஏ -1007 ஆனது ஒற்றை சிம் ஸ்மார்ட்போனாக இருக்குமென்று அறிவிக்கிறது.

எல்டிஇ பேண்ட் ஆதரவில் வேறுபாடுகள்

எல்டிஇ பேண்ட் ஆதரவில் வேறுபாடுகள்

சில அம்சங்களை தவிர இதர அம்சங்கள் எல்லாமே ஒரேபோலவே இருக்கும் என்றும் டிஏ -1035 ஆனது மற்றொரு இரட்டை சிம் பதிப்பு, அதே நேரத்தில் டிஏ-1023 சாதனமும் ஒரு ஒற்றை சிம் பதிப்பாக இருக்கலாம் இதற்குள் எல்டிஇ பேண்ட் ஆதரவில் வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

முன்பு வெளியான தகவலின்கீழ், நோக்கியா 2 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும், 1 ஜிபி ரேம், க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 210 சிப்செட் ஆகிய அம்சங்களை பெற்று பட்ஜெட் நட்பு சாதனமாக இருக்குமென்று அறியப்பட்டது. அதாவது நிறுவனத்தின் நோக்கியா 3 ஸ்மார்ட்போனையே தாக்கும் அளவிலான விலை நிர்ணயம் கொண்டிருக்கலாம்.

கேமரா, பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்பு

கேமரா, பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்பு

இதற்கு முன்னர் கைகளால் வரையப்பட்ட நோக்கியா 2 ஓவியங்கள் கசிந்தன. எனினும் இக்கருவியின் கேமரா, பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்பு ஆகியவற்றின் விவரங்கள் இன்னும் ஆன்லைனில் கசியவில்லை.

நோக்கியா 8

நோக்கியா 8

நோக்கியா 2 தவிர்த்து, ஆகஸ்ட் 16 நிகழ்வில் ஸ்னாப்டிராகன் 835 செயலி, இரட்டை பின்புற கேமராக்கள் கார்ல் ஜெயஸ் ஒளியியல் மற்றும் 5.3 அங்குல குவாட் எச்டி டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா 8 அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8 சார்ந்த லீக்ஸ் புகைப்படங்கள் முன்னணி நோக்கியா போன்களை போன்ற வடிவமைப்பை காட்சிபடுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 2 variants get FCC certifications: Launch to take place soon? Read more abuout this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X