நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2 வி டெல்லா என்ற ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனின் விலை 169 டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.12,400-ஆக உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது வால்மார்ட்.காம் வழியாக அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட வெரிசோன் கடைகள் மூலமாகவும், வெரிசோன்.காமிலும் இந்த மாத இறுதியில் வாங்க கிடைக்கும்.

புதிய நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. மேலும் 5.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 (எம்டி 6761) பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் வேறு சில பட்ஜெட் பிரெண்ட்லி நோக்கியா ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், வழக்கமான ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குகிறது. அதாவது இது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் கொண்டு இயங்கவில்லை.

இந்த நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி முதன்மை சென்சார் + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதன் முன்பக்கத்தில் ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் செல்பீ சென்சார் கிடைக்கும்.

குறிப்பாக வைஃபை, எல்.டி.இ, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ் /ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். நோக்கியா 2 வி டெல்லாவில் உள்ள சென்சார்களை பொறுத்தவரை, light sensor, proximity sensor மற்றும் accelerometer (G-sensor) உள்ளன.

நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அளவீட்டில், நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் ஆனது 150.6x71.6x9.3 மிமீ மற்றும் 180 கிராம் எடையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications