ரூ.6,999/-க்கு நோக்கியா 2: ஏன் வாங்கலாம்.? ஏன் வாங்க கூடாது என்பதற்கான 2 காரணங்கள்.!

|

இந்திய விற்பனையை ரூ,6,999/-க்கு தொடங்கியுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போன் தன இதுவரை வெளியானதிலேயே மிகவும் மலிவான நோக்கியா ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமில்லை.

நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 போன்ற கருவிகளுடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பெரிய சில்லறை அங்காடிகளிலிருந்தும் கிடைக்கும் நோக்கிய 2 ஆனது ஒரு பிரீமியம் வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு பங்களிப்பு, திடமான உருவாக்க கொண்ட தரம் மிக்க இரண்டு நாள் பேட்டரி ஆயுள் போன்ற பல வாக்குறுதிகளை வழங்குமொரு கருவியாகும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை நிர்ண்யத்தை தவிர்த்து, இக்கருவியை ஏன் நம்பி வாங்கலாம்.? மற்றும் ஏன் வாங்க கூடாது.? - என்பதற்கான காரணங்களை பற்றித்தான் நாம் இங்கு விரிவாக காணவுள்ளோம்.

நம்பி வாங்க காரணம் #01

நம்பி வாங்க காரணம் #01

வடிவமைப்பு, தரமான உருவாக்கம் : நோக்கியா ஸ்மார்ட்போன்களை "கைக்கு அடக்கமான பீரீங்கி" என்றே மிகைப்படுத்தி கூறலாம். அந்த அளவிலான உறுதித்தன்மையை கொண்டிருக்கும். அந்த விடயத்தில் நோக்கியா 2 நம்மை ஒன்றும் ஏமாற்றவில்லை. நோக்கியா 2 ஆனது அகற்றக்கூடிய பாலிகார்பனேட் பின்புறம் கொண்டுள்ளது, இது 600-அலுமினியத் தொடர் முள்ளம் உருவகம் பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த தொலைபேசி கையில் மிகவும் திடமானதாக உணரப்படுகிறது.

நம்பி வாங்க காரணம் #02

நம்பி வாங்க காரணம் #02

இரண்டு நாள் பேட்டரி நீட்டிப்பு வாக்குறுதி : நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய விற்பனை புள்ளி அதன் பேட்டரி ஆயுள் தான்,.நிறுவனத்தின்படி, நோக்கியா 2 -வின் 4100எம்ஏஎச் பேட்டரியானது ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால், அது இரண்டு நாட்கள் வரை பேற்றை ஆயுள் வழங்கும் என்று கூறுகிறது. நோக்கியா 2, அதிகமான மாறுபட்ட எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே பயன்படுத்துகிறது, அது குறைவான சக்தியைப் பயன்படுத்துகின்றன. இரண்டாவதாக, ஸ்னாப்ட்ராகன் 212 செயலியானது பெரிய பேட்டரி ஆயுளை வழங்க உதவுகிறது.

வாங்குவதை தவிருங்கள் காரணம் #01

வாங்குவதை தவிருங்கள் காரணம் #01

திறனற்ற உள்ளடக்கங்கள் : நோக்கியா 2 ஸ்மார்ட்போன், ஸ்னாப்ட்ராகன் 212 ப்ராசசர் உடனான 1 ஜிபி ரேம் மற்றும் அட்ரெனோ 304 ஜீபியூ மூலம் இயக்கப்படுகிறது. இந்த அளவிலான உள்ளடக்கங்கள் தினசரி பயன்பாட்டிற்கு நிச்சயம் உதவும் ஆனால், தீவிரமான பணிச்சுமைகளை திறமையாக கையாளுமா.? என்பது தான் இப்போது எழும் மிகப்பெரிய கேள்வியாகும்.

வாங்குவதை தவிருங்கள் காரணம் #02

வாங்குவதை தவிருங்கள் காரணம் #02

அற்பமான உள் சேமிப்பு : மறுகையில் நோக்கிக்யா 2-வின் உள் சேமிப்பு திறனும் ஏமாற்றமளிக்கிறது.மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கப்படலாம் என்ற போதிலும், 8 ஜிபி என்பது 2017-இல் மிகவும் அற்பமானது. இந்த அளவிலான சேமிப்பு திறன் கொண்ட கருவிக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கிடைத்தால் என்ன.? கிடைக்கவில்லை என்றால் என்ன.? என்பது நோக்கிய 2 மீதான இரண்டாவது கேள்வியாகும்.!

அசத்தும் போட்டியாளர்கள் :

அசத்தும் போட்டியாளர்கள் :

நோக்கியா 2 ஒன்றும் வெற்றிடத்தில் இல்லை. சியோமி நிறுவனமும் சில அல்ட்ரா மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துகொண்டே தான் வருகிறது. குறிப்பாக ரெட்மீ 4 மற்றும் ரெட்மி Y1 லைட் ஆகிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை கூறலாம். இந்த இரண்டு கருவிகளுமே நோக்கியா 2-ஐ விட சிறப்பான அம்சங்களை வழங்குகின்றன. ரெட்மி 4 மற்றும் ரெட்மி Y1 லைட் கருவிகளை நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் தரமான உருவாக்கத்துடன் ஒப்பிட முடியாது என்றாலும், அவை மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 425 செயலி மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளன.

எதிர்பார்த்ததை விட மலிவான விலையில்.!

எதிர்பார்த்ததை விட மலிவான விலையில்.!

சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 2-வின் இந்திய விற்பனை விலை நிர்ண்யம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஆன்லைனில் சில்லறை விற்பனையாளர்களான அமேசான், மற்றும் பி & எச் ஆகியவற்றில் 99 அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ணயத்தை பெற்றிருந்ததால் ரூ.7,500/- என்ற விலை நிர்ணயத்தை பெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட மலிவான விலைக்கே இந்தியாவிற்குள் நோக்கியா 2 நுழைகிறது.

மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

இந்தியாவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வரும் வெள்ளி (நவம்பர் 24) முதல் நாட்டில் விற்பனைக்கு செல்லும். இந்தியாவில் கிடைக்கும் வண்ண மாறுபாடுகளை பொறுத்தமட்டில் : பியூட்டர்/பிளாக், பியூட்டர்/வெள்ளை மற்றும் காப்பர்/பிளாக்.!

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் "2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்" தான். அதாவது, நோக்கியா கருவிகளின் பேட்டரித்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு 4100எம்ஏஎச் பேட்டரியை நோக்கியா 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

பாலிகார்பனேட் கொண்டு வெளியே கட்டப்பட்டுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு சிறப்பம்சமாக அதன் 6000 தொடர் அலுமினியம் சட்டம் திகழ்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 1: 1300 கான்ட்ராஸ்ட்ரேஷன் விகிதம் கொண்ட 5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவியில் கூகுள் அசிஸ்டண்ட் அணுகல் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 2 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறுமென உறுதியாக நம்பலாம். உடன் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 எஸ்ஓசி (க்வாட்-கோர், 1.2ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் 1 ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஸ்டாண்டார்ட் ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் நோக்கியா 2 ஆனது 143.5x71.3x9.3 மிமீ கொண்டுள்ளது மற்றும் ஐபி52 (ட்ரிப் அதாவது சொட்டு நீர்) பாதுகாப்பும் கொண்டுள்ளது.

8 ஜிபி  + 128  ஜிபி.!

8 ஜிபி + 128 ஜிபி.!

சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், 8 ஜிபி அளவிலான உஉள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்கும். இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 2 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், ஆர்டிஸ், மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில் - பிளாக் முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் பிளாக், வெள்ளை முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் வெள்ளை மற்றும் பிளாக் பின்புறம், வெள்ளை முன்பக்கம், காப்பர் ப்ரேம் உடனான காப்பர் - வெளியாகிறது.

சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களில்.!

சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களில்.!

நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னர் வெளியான நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்றே, ஆரம்பத்தில் ஆஃப்லைனில் வெளியிடப்பட்டு பின்னர் ஆன்லைனில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2: Two reasons to consider and skip Nokia's budget offering. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X