ரூ.7,500/-ஐ கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க.. சூப்பர் பட்ஜெட் நோக்கியா 2.!

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவியில் கூகுள் அசிஸ்டண்ட் அணுகல் உள்ளது.

|

கடந்த அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆனது, இதுவரை ஹெச்எம்டி க்ளோபல் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளிலேயே மிகவும் மலிவான கருவியாகும்.

ரூ.7,500/-ஐ கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க.. நோக்கியா 2 is coming.!

இந்த சாதனம் ஏற்கனவே ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் முன் பதிவிற்கு திறந்து விடப்பட்டுள்ள நிலைப்பாட்டில் இப்போது, நோக்கியா 2 ஆனது அடுத்தகட்டமாக அமெரிக்க சந்தையில் களம் காண்கிறது.

இந்திய விற்பனை.?

இந்திய விற்பனை.?

நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க ஆன்லைனில் சில்லறை விற்பனையாளர்களான அமேசான், மற்றும் பி & எச் ஆகியவற்றில் 99 அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ணயத்துடன் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இக்கருவியின் இந்திய விற்பனையானது, எப்போது என்ற அறிவிப்புகளை வரும் நாட்களில் எச்எம்டி க்ளோபல் அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களில்.!

சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களில்.!

மறுகையில் நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது எப்போது வெளியாகினும் நாடு முழுவதும் உள்ள சுமார் 1,00,000 ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்பது உறுதி. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 போன்றே, ஆரம்பத்தில் ஆஃப்லைனில் வெளியிடப்பட்டு பின்னர் ஆன்லைனில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்.!

நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் "2-நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுள்" தான். அதாவது, நோக்கியா கருவிகளின் பேட்டரித்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு 4100எம்ஏஎச் பேட்டரியை நோக்கியா 2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே.!

பாலிகார்பனேட் கொண்டு வெளியே கட்டப்பட்டுள்ள நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு சிறப்பம்சமாக அதன் 6000 தொடர் அலுமினியம் சட்டம் திகழ்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 1: 1300 கான்ட்ராஸ்ட்ரேஷன் விகிதம் கொண்ட 5 இன்ச் எச்டி எல்டிபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ள இக்கருவியில் கூகுள் அசிஸ்டண்ட் அணுகல் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (தற்போது).!

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட நோக்கியா 2 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் பெறுமென உறுதியாக நம்பலாம். உடன் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 எஸ்ஓசி (க்வாட்-கோர், 1.2ஜிகாஹெர்ட்ஸ்) மற்றும் 1 ஜிபி எல்பிடிடிஆர்3 ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

8 மெகாபிக்சல் +5 மெகாபிக்சல்.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஸ்டாண்டார்ட் ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.

8 ஜிபி  + 128  ஜிபி.!

8 ஜிபி + 128 ஜிபி.!

சேமிப்புத்திறனை பொறுத்தமட்டில், 8 ஜிபி அளவிலான உஉள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது உடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்கும். இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 2 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், ஆர்டிஸ், மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில்.!

மொத்தம் மூன்று வண்ண மாறுபாடுகளில் - பிளாக் முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் பிளாக், வெள்ளை முன்பக்கம் மற்றும் பிளாக் ப்ரேம் உடனான பியூட்டர் வெள்ளை மற்றும் பிளாக் பின்புறம், வெள்ளை முன்பக்கம், காப்பர் ப்ரேம் உடனான காப்பர் - வெளியாகிறது.

ட்ரிப் ப்ரொடெக்ஷன்அதாவது சொட்டு நீர் பாதுகாப்பு

ட்ரிப் ப்ரொடெக்ஷன்அதாவது சொட்டு நீர் பாதுகாப்பு

சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸலரேமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் நோக்கியா 2 ஆனது 143.5x71.3x9.3 மிமீ கொண்டுள்ளது மற்றும் ஐபி52 (ட்ரிப் அதாவது சொட்டு நீர்) பாதுகாப்பும் கொண்டுள்ளது.

சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.!

சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.!

இப்போது வரை, ​​நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் வெளியிடப்படவில்லை. இருப்பினும்,எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் உலகளாவிய விலைப்புள்ளியை வைத்து பார்க்கும் போது, இது சுமார் ரூ.7,500/- என்ற விலையை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 2 is up for pre-order in the US . Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X