வேற போன் வாங்கிடாதீங்க.! 4000எம்ஏஎச் பேட்டரியுடன் "சூப்பர் பட்ஜெட்" விலையில் நோக்கியா 2.!

|

உலக ஸ்மார்ட்போன் சந்தைக்கு "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று கர்ஜிக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகம் யாருக்குமே தேவைப்படாது. அத்தனை பெருமையும் நோக்கியா பிராண்ட் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கே சேரும்.

4000எம்ஏஎச் பேட்டரியுடன்

நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் நோக்கியா 7 ஆக இருக்கலாமென்று நாமெல்லாம் எதிர்நோக்கி காத்திருக்க, ஒரு ஸ்வீட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த நோக்கியா ஆண்ட்ராய்டு - நோக்கியா 2 ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது

விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது

நோக்கியா 2 பற்றிய பல வதந்திகளை நாங்கள் கேட்டிருக்கிறோம், தற்போது வெளியாகியுள்ள தகவலானது, அமெரிக்க அடிப்படையிலான இ-காமர்ஸ் தளத்தில் சாதனத்தின் விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளதின் கீழ் அறியப்படுகிறது.

கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில்

கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில்

ஐக்கிய அமெரிக்கவில் திறக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் பி&எச் வலைத்தளமானது, நோக்கியா 2 கருவியை கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் 99 டாலர்களுக்கு (சுமார் ரூ.6,440) பட்டியலிடப்பட்டுள்ளது.

இரட்டை சிம்

இரட்டை சிம்

இரட்டை சிம் சாதனமான வெளிப்படுத்தப்பட்ட நோக்கியா 2 பற்றிய வலைதள விவரங்கள் செய்தி ஊடகங்களில் கண்களில் தென்பட்டு வெளியே வந்தவுடன், வலைப்பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது.

நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்

நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்

முன் அறிவிக்கப்பட்டபடி, புதிய நோக்கியா 2 என்ற நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை பொறுத்தமட்டில், விற்பனைப் பகுதியைப் பொறுத்து, இக்கருவி இரண்டு வகைகளில் விற்கப்படும்: டிஏ-1035 (அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்டது) மற்றும் டிஏ-1029 (ரஷ்யாவில் சான்றிதழ் பெற்றுள்ளது).

பாலிகார்பனேட் அடிப்படையிலான ஷெல்

பாலிகார்பனேட் அடிப்படையிலான ஷெல்

இது 4.5 அங்குல எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் பலமான பாலிகார்பனேட் அடிப்படையிலான ஷெல் இடம்பெற்றுள்ளது. மேலும் இக்கருவி 1.3GHz க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 க்வாட்-கோர் (ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ7 x 4) செயலி கொண்டிருக்கலாம்.

1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு

1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு

மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (அண்ட்ராய்டு ஓரியோ புதுப்பிப்பு உத்தரவாதத்துடன்), 1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு (மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்க ஆதரவு) எல்இடி ப்ளாஷ் ஆதரவு கொண்ட ஒரு 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் செல்பீக்களுக்கான 5எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கலாம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் தவிர, கூறப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் அதன் புகழ்பெற்ற பண்புக்கூறுகளில் ஒன்றான திறன்மிக்க பேட்டரி ஒன்றும் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதாவது ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிலான பேட்டரி, ஒரு கலவையான பயன்பாட்டின் கீழ் இரண்டு நாட்களுக்கு தொலைபேசியை இயக்க போதுமானதாக இருக்கும்.

இந்தாண்டிற்குள் வெளியாகலாம்

இந்தாண்டிற்குள் வெளியாகலாம்

நோக்கியா 2 சார்ந்த அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தேதி மற்றும் அம்சங்கள் பற்றிய எந்தவொரு வார்த்தையும் இல்லை. ஆனால் இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம். நோக்கியா 2 மட்டுமின்றி இன்னும் சில நோக்கியா கருவிகள் (குறிப்பாக நோக்கியா 7) இந்தாண்டிற்குள் வெளியாகலாம்.

எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே

எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா 9 ஆனது 140.9x72.9x7.5 மிமீ என்ற பரிமாணத்தில், 5.5 அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்சல்கள்) ஓஎல்இடி எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே கொண்டிருக்கும்.

13எம்பி+13எம்பி டூயல் பின்புற கேமரா

13எம்பி+13எம்பி டூயல் பின்புற கேமரா

மேலும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 880/845 சிபியூ, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 6ஜிபி/8ஜிபி ரேம், 64ஜிபி / 128ஜிபி உள் நினைவகம் (மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் உடன்), பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவுடனான் ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி+13எம்பி டூயல் பின்புற கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 2 gets listed; all you need to know about the budget Android phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X