Home
Mobile

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.4 சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்குவதாக ட்விட்டர் வழியாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட் நோக்கியா 2.4 பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

, மேம்பட்ட தனியுரிமை

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன்
ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த
சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 13எம்பி பிரைமரி லென்ஸ்

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது, ஆனால் தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே ஒரு முழு சார்ஜில் 2 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்போனை அருமையாக பயன்படுத்த முடியம். அதேபோல் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு
ஆதரவகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

டை 189 கிராம் என்று

டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத், ஜிபிஎஸ் + க்ளோனாஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 189 கிராம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2.4 Received Android 11 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X