நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்: ஆன்லைனில் வெளியான சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்!

|

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான விவரங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.

நோக்கியா புதிய மாடல்

நோக்கியா புதிய மாடல்

எச்எம்டி குளோபல் விரைவில் நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. நோக்கியா 9.3 ப்யூர் வியூ மற்றும் நோக்கியா 6.3 குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது நோக்கியா 2.4 குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது. இது நோக்கியா பிராண்டின் ஆரம்ப நிலை தயாரிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் அடுத்த காலாண்டில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நோக்கியா 2.4 குறித்த வெளியான விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனானது கனடிய சான்றிதழ் இணையதளத்தில் பட்டியிலடப்பட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டவைகள் குறித்து பார்க்கலாம். நோக்கியா பட்டியிலடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும், அவை நோக்கியா 9.3, நோக்கியா 7.3, நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 2.4 ஆகியவைகள் ஆகும்.

நோக்கியா 2.4: அம்சங்கள்

நோக்கியா 2.4: அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உள்ளது. நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலியுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 2 ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 13 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராக்கள் இதில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மெகாபிக்சல் கேமரா

8 மெகாபிக்சல் கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் 4500 எம்ஏஹெச் பேட்டரி சிறந்த சார்ஜிங் அம்சத்தோடு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நோக்கியா 2.4 விலை ரூ.20,000-க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்!விஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்!

மூன்று புதிய பிராண்ட் ஸ்மார்ட்போன்கள்

மூன்று புதிய பிராண்ட் ஸ்மார்ட்போன்கள்

எச்எம்டி குளோபல் 2020 மூன்று புதிய பிராண்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இது நான்காவது ஸ்மார்ட்போனாக பட்டியிலடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

மேலும் வெளியான புது தகவலின்படி இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் மூன்றாம் காலாண்டின் இறுதியில் அல்லது இந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீலியோ பி 22 எஸ்ஓசி சிப்செட்

ஹீலியோ பி 22 எஸ்ஓசி சிப்செட்

கீக்பெஞ்ச் பட்டியலின்படி புதிய டெக் நோக்கியா தொலைபேசி மீடியாடெக் எம்டி 6762 வி / டபிள்யூ பி சிப்செட் மூலம் இயக்கும் என்பதைக் குறிக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ பி 22 எஸ்ஓசி சிப்செட்டுடன் வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 2.4 May announced at IFA2020 Here Online Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X