Nokia 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை எச்எம்டி குளோபல் இப்போது தொடங்கியுள்ளது. இதன் பொருள் 11 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் பெற்றுள்ளன.

இன்றைய நிலவரப்படி, நோக்கியா 8 சிரோக்கோ , நோக்கியா 8.1 , நோக்கியா 7.2 , நோக்கியா 7 பிளஸ் , நோக்கியா 6.1, நோக்கியா 7.1 ,நோக்கியா 6.1 பிளஸ் , நோக்கியா 4.2, நோக்கியா 2.2 , நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 2.3 அனைத்தும் ஆண்ட்ராய்டு 10 க்குமேம்படுத்தப்பட்டுள்ளன.

எச்டி பிளஸ் டிஸ்பிளே
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல்
திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications