குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 2.3.!
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் மற்றும ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.8,199-ஆக உள்ளது.

ரூ.2,200 கேஷ்பேக்
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல் Zoomcar சார்பில் குறிப்பிட்ட சலுகையும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சலுகைகள் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எச்டி பிளஸ் டிஸ்பிளே
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 183கிராம் ஆக உள்ளது.

ஆண்ட்ராய்டு 10
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications