Nokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்து. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் கிடைக்கிறது.

நோக்கியா 3.2 விலைகுறைப்பு
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,199-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,199-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எச்டி பிளஸ் டிஸ்பிளே
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு720 x 1520 பிக்சல் திர்மானம் மறறும் 19:9 என்ற திரைவிகிதம் வசதியைக் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதாலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்; எடை 183கிராம் ஆக உள்ளது.

ஆண்ட்ராய்டு 10
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் பிராசஸர் உடன் பவர்(விஆர்) ஜிஇ-கிளாஸ் ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.3 கேமரா
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 5எம்பி செல்பீ கேமரா, பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications