நோக்கியா 2.2 பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம்செய்யப்பட்டது.

பின்பு கடந்த 2020-ம் ஆண்டு இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்தது. தற்சமயம் வெளிவந்த தகவலின்படி நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த அப்டேட் 24 நாடுகளில் உள்ள நோக்கியா 2.2 பயனர்களுக்கு கிடைத்துள்ளது என்றும், ஆனால் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தோனேஷியா, லாவோஸ், லாட்வியா, லிதுவேனியா, மாசிடோனியா, மலேஷியா, மியான்மர், நார்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, ருமேனியா, சுவீடன், தாய்லாந்து , வியட்நாம் போன்ற 24 நாடுகளில் உள்ள நோக்கியா 2.2 பயனர்களுக்கு இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள நோக்கியா 2.2 பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் மார்ச் 2021 ஆண்ட்ராய்டு security patch வசதியும் கிடைத்துள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1520 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் உள்ளது.
இரட்டை சிம், வைஃபை , புளூடூத், ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications