Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் நோக்கியா 2.2: விலை எவ்வளவு தெரியுமா?

2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, மேலும் இன்று அந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி
கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இன்று பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி மெமரி கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் வரும் 30-ம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரதிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல்
திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 ஆண்ட்ராய்டு 9.0 பை

ஆண்ட்ராய்டு 9.0 பை

மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும்
5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு
அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

 விலை:

விலை:

2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.
ஸ்டீல் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 2.2 to be available for sale price specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X