நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நோக்கியா வலைதளத்தில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஸ்மாட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நோக்கயா வலைதளத்தில் 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த சாதனத்தின் முந்தயை விலை ரூ.6,599-ஆக இருந்தது. பின்பு 3ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.6,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.7,599-ஆக இருந்தது.
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.


Click it and Unblock the Notifications