நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் நோக்கியா 2.2 மற்றும் நோக்கியா 3.2ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 2.2 & நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,699-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,599-க்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 2.2 டிஸ்பிளே
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 2.2 & நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 2.2 கேமரா
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

நோக்கியா 2.2 & நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 3.2 டிஸ்பிளே
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 2.2 & நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 3.2 கேமரா
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia 2.2, Nokia 3.2 Price in India Cutand More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X