இந்தியா: ரூ.6,999-விலையில் மிரட்டலான நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஸ்டீல் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை

ஆண்ட்ராய்டு 9.0 பை

மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை

அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

சாம்சங் அறிமுகப்படுத்தும் உலகத்தின் முதல் QLED 8கே ஸ்மார்ட் டிவி.! விலை தான் சற்று அதிகம்.!

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

5.71-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் கூல் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 விலை:

விலை:

2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் 11-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும்.

பள்ளி மாணவி கண்டுபிடித்த சூப்பர் ஏ.ஐ.! எதுக்குன்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 2.2 launched in India ram camera specs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more