இந்தியா: 3ஜிபி ரேம் உடன் நோக்கியா 2.1, நோக்கியா 5.1,நோக்கிய 3.1 அறிமுகம்: விலை.!
நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று 3ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான நாக்கியா 2.1, நோக்கியா 5.1, நோக்கிய 3.1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் நோக்கியா ஸ்டோர், பேடிஎம் மால் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கள்விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 2.1:
நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 2.1 விலை:
நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

நோக்கியா 3.1:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் 6750 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 3.1 விலை:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது,பின்பு 2900எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 3ஜபி ரேம் கொண்ட இக்கருவியின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

நோக்கியா 5.1:
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நோக்கியா 5.1 விலை:
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது,பின்பு 3200எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 3ஜபி ரேம் கொண்ட இக்கருவியின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications