Home
Mobile

வெறும் ரூ.1950/-க்கு 32 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட நோக்கியா 150.!

இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.? இந்தியாவில் வாங்குவது எப்படி.?

By Muthuraj

கடந்த டிசம்பரில் நோக்கியா பிராண்ட் நிறுவன கருவிகளை தயாரிக்கும் உரிமைகளை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 150 கருவியை அறிமுகம் செய்தது.

வெறும் ரூ.1950/-க்கு 32 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட நோக்கியா 150.!

ஒற்றை மற்றும் இரட்டை சிம் அம்சம் கொண்ட இக்கருவி அறிவிக்கப்பட்ட பிறகு இந்த பீச்சர் போனை வாங்க நோக்கிய கிளாஸிக் அக்கருவி காதலர்கள் ஆர்வமாக காத்திருக்கும் இந்த தருணத்தில் எந்த ஆடம்பரமான பிரகடனமும் இல்லாமல், நிறுவனம் அதன் இரட்டை சிம் அம்சம் கொண்ட நோக்கியா 150 கருவியை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ழுமுதல் தயாரிப்பு

ழுமுதல் தயாரிப்பு

இந்த கருவியின் மூலம் நோக்கியா முத்திரை கருவிகளின் பட்டியலில் ஒரு கருவியை சேர்ப்பதன் உடன் அதன் சந்தை விரிவாக்கமும் நிகழ்த்த திட்டமிடப்பட்டுளளது. உடன் இந்த தொலைபேசிதான் மொபைல் சந்தையில் நுழையும் ஒரு அறிவிப்வை செய்த பின் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் முழுமுதல் தயாரிப்பு என்றும் கூறப்படுகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இக்கருவி அதன் பாரம்பரிய முறை போலவே வடிவமைப்பு பெற்றுள்ளது. உடன் இந்த நோக்கியா 150 டூயல் சிம் ஆதரவு கொண்ட பாலிகார்பனேட் ஷெல் மூலம் உருவான ஒரு வலுவான உடல் கொண்டுள்ளது. அளவீட்டில் 118.0x50.2x13.5மிமீ மற்றும் அதன் பேட்டரி உட்பட சேர்த்து 81.0 கிராம் எடை கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் இக்கருவியின் உடல் ஆனது இயற்கையாகவே கீறல் விழாத அம்சம் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது, அது கருவியின் நம்பகத்தன்மை காட்டுகிறது. இந்த தொலைபேசி 240X 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 2.4 அங்குல க்யூவிஜிஏ (QVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமரா மற்றும் சேமிப்பு

கேமரா மற்றும் சேமிப்பு

நோக்கியா 150 டூயல் சிம் கருவியானது எல்இடி ப்ளாஷ் கொண்ட விஜிஏ தீர்மானம் கேமரா கொண்டுள்ளது. மற்றும் நோக்கியா சீரிஸ் 30 + இயங்குதளம் கொண்டு இக்கருவி 32 ஜிபி வரை சேமிப்பு விருப்ப விரிவாக்க ஆதரவை அனுமதிக்கிறது உடன் மைக்ரோ அட்டை ஸ்லாட் ஒன்றும் வருகிறது.

பேட்டரித்திறன்

பேட்டரித்திறன்

இந்த தொலைபேசியானது 1020எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது மற்றும் அது 22 மணி நேர வரை பேச்சு நேரம் மற்றும் 25 நாட்கள் காத்திருப்பு நேரம் வழங்கும். இக்கருவி போன்றே மற்றொரு மாறுபாடு ஆன ஒற்றை சிம் அக்கருவி 31 நாட்களுக்கு ஒரு காத்திருப்பு நேரம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

நோக்கியா 150 டூயல் சிம் ஆனது மைக்ரோ யூஎஸ்பி, 3.5 மிமீ ஏ.வி. இணைப்பு, ஸ்லாம் எஃப்எம் ரேடியோ மற்றும் எம்பி 3 பிளேயர் உடனான ப்ளூடூத் 3.0 ஆகிய இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது. மற்றும் கிளாஸிக் ஸ்நேக் சென்ஸீயா மற்றும் கேம்லோப்ட் வழங்கும் நைட்ரோ ரேசிங் போன்ற ப்ரீலோடட் கேம்களுடன் பயனர் வசதிக்கான எல்இடி லைட் ஒன்றும் இக்கருவியில் இடம்பெற்றுள்ளது.

4ஜி வோல்ட் அம்சம்

4ஜி வோல்ட் அம்சம்

இந்த கருவியோடு நில்லாது எதிர்காலத்தில் இன்னும் சில பீச்சர் போன்களை நாம் எதிர்பார்க்கலாம் குறிப்பாக வெளியான வதந்திகளின்படி 2017-ஆம் ஆண்டுடின் இரண்டாவது காலாண்டில் க்வால்காம் 205 எஸ்ஓசி கொண்ட 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட நோக்கியா கருவிகள் அறிவிக்கப்படலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மிகவும் சக்திவாய்ந்த நோக்கியா 7 மற்றும் 8 (விலை, அம்சங்கள், வெளியீடு).!?

Best Mobiles in India

English summary
Nokia 150 with 32GB is now available in India at Rs.1,950. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X