அறிமுகம் : நோக்கியா 150, நோக்கியா 150 டூயல் சிம் பீச்சர் போன்கள்.!

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே அதன் முதல் நோக்கியா பிராண்ட் போன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

|

2017-ல் நோக்கியா அதன் மறுவருகையை நிகழ்த்தப்போகிறது அதாவது நோக்கியா அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடப்போகிறது என்பதை நோக்கியா ரசிகர்கள் ஆகிய நாம் அனைவருமே அறிவோம்.

தற்போது நோக்கியா கருவிகளை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எப்போது நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் சார்ந்த அதிகாரப் பூர்வமான தகவல்களையும், வெளியீட்டு தேதியையும் அறிவிக்கும் என்று நாமெல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்க எச்எம்டி க்ளோபல் நிறுவனம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே அதன் முதல் நோக்கியா பிராண்ட் போன்களான நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் வெளியானது ஆண்ட்ராய்டு கருவிகள் அல்ல பீச்சர் போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு

விற்பனைக்கு

2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசிய, பசிபிக், இந்திய, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த இரண்டு கருவிகளின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தொகுப்பே இது. முடிவில் புரிந்து கொள்வீர்கள் இது நோக்கியாவின் ஒரு 'க்ளாஸிக் ரீலிஸ்' என்பதை..!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அடிப்படை போன்கள்

அடிப்படை போன்கள்

நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் ஆகிய இரண்டு கருவிகளும் இணைய அணுக்கள் வசதி இல்லாத அடிப்படை போன்கள் ஆகும். எனினும், இக்கருவிகள் ஒரு எம்பி3 பிளேயர், எஃப்எம் ரேடியோ, ஸ்லாம் உடனான ப்ளூடூத் வி3.0, மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட ஒரு விஜிஏ கேமிரா ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

விலை

விலை

நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம், 2.4 அங்குல க்யூவிஜிஏ (QVGA) (240x320 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம் கொண்ட இக்கருவியின் விலை சுமார் ரூ.1,800/- என்று நிர்யணிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்ட் பை நேரம்

ஸ்டான்ட் பை நேரம்

நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் ஆகிய இரண்டு கருவிகளுமே 22 மணி நேர பேட்டரி ஆயுள் வாய்ப்பை வழங்கும் என்று எச்எம்டி க்குளோபல் தெரிவித்துள்ளது. உடன் நோக்கியா 150 கருவியின் ஸ்டான்ட் பை நேரம் 25 நாட்கள் நீடிக்கும் மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் கருவியின் பேட்டரி ஸ்டான்ட் பை நேரம் 31 நாட்கள் நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அம்சங்கள்

அம்சங்கள்

டிஸ்ப்ளே : 2.40 அங்குலம்
முன்பக்க கேமிரா : இல்லை
தீர்மானம் : 240x320 பிக்சல்கள்
ஓஎஸ் : சீரிஸ் 30
பின்புற கேமரா : 0.3 மெகாபிக்சல்
பேட்டரி திறன் :1020எம்ஏஎச்

மேலும் படிக்க

மேலும் படிக்க

விலை ரூ.10,000/- மற்றும் நோக்கியா டி1சி அம்சங்கள், ஆன்லைனில் கசிந்தன.!

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 150, Nokia 150 Dual SIM Feature Phones Launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X