Home
Mobile

உன் அப்பன் விசில கேட்டவன் டா நான்.. மாடர்ன் சாஃப்டவேர் உடன் மீண்டும் NOKIA 130, NOKIA 150 அறிமுகம்!

"அதெல்லாம் ஒரு காலம்" என்று அடிக்கடி உச்சுக்கொட்டும்.. பல்லாயிரக்கணக்கான பழைய நோக்கியா பீச்சர் போன் பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால். உங்களுக்கொரு குட் நியூஸ். நோக்கியாவின் 2 பிரபலமான மாடல்களான நோக்கியா 130 மற்றும் நோக்கியா 150 மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன; அதுவும் மாடர்ன் சாஃப்டவேர் உடன்!

நோக்கியா பீச்சர் போன்கள் (NOKIA Feature Phones) என்றதுமே ஸ்னேக் கேம் (Snake Game) விளையாடிய நாட்களும், ஸ்மார்ட்போன்கள் இல்லாத அந்த காலத்தில், நம்முடைய வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்தது என்கிற எண்ண ஓட்டங்களும் உங்களுக்கு சில ஃப்ளாஷ்பேக்குகளை நிச்சயம் கொடுக்கக்கூடும்.

மாடர்ன் சாஃப்டவேர் உடன் மீண்டும் NOKIA 130, NOKIA 150 அறிமுகம்!

ஸ்மார்ட்போன்கள் - உட்காந்த இடத்தில் இருந்தபடியே எல்லா வேலைகளையும் முடிக்க உதவுகின்றன தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதே சமயம் ஸ்மார்ட்போன்கள் கவனச்சிதறல்களை (Distractions) உண்டாக்கும் மிகமுக்கியமான காரணமாக உருமாறி உள்ளது; சிறிதளவு கூட உங்களுக்கு ஓய்வ கிடைப்பதை தட்டிப்பறிக்கிறது.

மேற்கண்ட 'சீரியஸ்' ஆன காரணங்கள் மட்டுமின்றி, வெறுமனே ஒரு செக்கென்டரி மொபைல் போன் (Secondary Mobile Phone) தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் ஒரு அதிதீரவிரமான நோக்கியா மொபைல் பிரியராக (Nokia Mobile Lover) இருந்தாலோ கூட.. மீண்டும் அறிமுகம் செய்யபட்டுள்ள நோக்கிய 130 மற்றும் நோக்கியா 150-ஐ கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!

"மீண்டும் அறிமுகம்" என்கிற வார்த்தை உங்களை சற்றே குழப்பமடைய செய்யலாம். அதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் கேட்கலாம். நோக்கியாவின் கூற்றுப்படி நோக்கியா 130 மற்றும் நோக்கியா 150 போன்களின் ஹார்ட்வேரில் (Hardware) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் மென்பொருள் (Softwawe) மற்றும் அதிலுள்ள அம்சங்கள் (Features) நவீனமாக்கப்பட்டுள்ளன.

நோக்கியா 150 (NOKIA 150) பீச்சர் போனின் அம்சங்கள்: நோக்கியா 150 மாடல் ஆனது மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கும். இது 1450எம்ஏஎச் அளவிலான நீக்கக்கூடிய பேட்டரி (Removable Battery) மூலம் சக்தியூட்டப்படுகிறது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி ஒரு மாதம் வரையிலான ஸ்டேண்ட்பை டைம்-ஐ (Standby Time) வழங்கும்.

நோக்கியா 150 ஆனது 2.4 இன்ச் அளவிலான க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. மேலும் இது ப்ரீ-இன்ஸ்டால்டு எஃப்எம் ரேடியோவையும் (Pre-installed FM Radio) கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இசை மற்றும் பலவற்றை கேட்கலாம்; நிச்சயம் இது உங்களை "ரெட்ரோ காலத்திற்கு" கொண்டு செல்லும்.

சுவாரசியமாக நோக்கிய 150 இல் கேமரா உள்ளது. இது 0.3 மெகாபிக்சல் விஜிஏ கேமராவுடன் (0.3MP VGA Camera) வருகிறது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவுடன் (Micro SD Card Support) வருகிறது. இதன் மூலம் உங்கள் எல்லா தரவையும் இந்த மொபைல் போனில். கடைசியாக மைக்ரோ யுஎஸ்பி (Micro USB) மூலம் போனை சார்ஜ் செய்ய முடியும்.

நோக்கியா 130 (NOKIA 130) பீச்சர் போனின் அம்சங்கள்: நோக்கியா 150 மாடலை போலவே நோக்கிய 130 மாடலும் கூட 1450எம்ஏஎச் அளவிலான நீக்கக்கூடிய பேட்டரி மற்றும் 2.4-இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இருப்பினும் நோக்கிய 130 மாடலானது நோக்கியா 150-ஐ போல கேமராவை கொண்டிருக்கவில்லை.

பொதுவான அம்சங்களை பொறுத்தவரை இரண்டு போன்களிலும் 12-கீ நம்பர் பேட் (12-Key Number Pad) உடனான பிஸிக்கல் பட்டன்கள் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டமிற்கு உதவும் நேவிகேஷன் பட்டன்களை (Navigation Buttons) உள்ளன. இந்த போன்களில் உள்ள நேவிகேஷன் பட்டன்கள் ஆனது சீரீஸ் 30 பிளஸ் (Series 30 Plus) என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும் இவ்விரு நோக்கியா பீச்சர் போன்களிலும் மிகவும் கிளாசிக் ஆன மொபைல் கேம் ஆன ஸ்னேக் கேமின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பும் (Snake Game Updated Version) உள்ளது. நோக்கியாவின் கூற்றுப்படி, புதிய ஸ்னேக் கேம் வெர்ஷன் ஆனது, விளையாடும் பயனர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். இவ்விரு போன்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏதேனும் தகவல் கிடைத்தால் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 150 and Nokia 130 Launched With Modern Software Specifications Updated Snake Game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X