ஆளுக்கு 3 வாங்கும் விலை.. 34 நாட்கள் பேட்டரி பேக்கப்.. கம்பேக் கொடுத்த நோக்கியா.. எந்த மாடல்?
இன்று, எவ்வளவோ அம்சங்களுடன், எத்தனையோ போன்கள் மார்கெட்டில் கிடைத்தாலும், ஒரு சாதாரண நோக்கியா போன் கொடுத்த மலரும் நினைவுகளை அவற்றால் கொடுக்க முடிவதில்லை. இதனாலேயே நோக்கியா போன்கள் மீதான ஈர்ப்பு குறையாமல் இருக்கிறது. இப்போது, வந்திருக்கும் புதிய மாடல்கள் பழைய நினைவுகளை கிளப்பிவிட்டுள்ளது.
இந்தியாவில் நோக்கியா போன்கள் என்றாலே, தனி மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. இதற்கு அந்த போன்களின் நீடித்த உழைப்பும், மிகுந்த தரமும் மட்டுமே காரணமாகும். செல்போன்கள் பயன்பாடு அதிகரித்த காலத்தில், நோக்கியா போன்களே பெரும்பாலான மக்களின் நம்பிக்கை பெற்ற போனாக உருவெடுத்தது.

ஆனால், ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்கு பின், நோக்கியா பீச்சர் போன்களின் சகாப்தம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. இருப்பினும், அந்த போன்கள் மீதான மக்களின் ஆர்வம், அவற்றின் விற்பனையை இன்றளவும் காத்து வருகிறது. இந்த வரிசையில் அந்த காலத்தில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நோக்கியா 130 மியூசிக் மற்றும் நோக்கியா 150 போன்கள் புதுப்பொழிவுடன் மீண்டும் களமிறங்கியிருக்கின்றன.
நோக்கியா 130 மியூசிக் 2023 அம்சங்கள் (Nokia 130 Music 2023 Specifications): இந்த நோக்கியா போன் 2.4 இன்ச் (240 x 320 பிக்சல்கள்) கியூவிஜிஏ (QVGA) டிஸ்பிளே கொண்டுள்ளது. நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் ஓஎஸ் (Nokia Series 30+ OS) வருகிறது. 4 எம்பி மெமரி மற்றும் 32 ஜிபி எஸ்டிகார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வயர்லெஸ் ஃஎப்எம் ரேடியோ, எம்பி3 பிளோயர் வருகிறது. டூயல் பேண்ட் (900/1800MHz) சிம் கார்டுகள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 1450mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 34 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கிடைக்கும்.
நோக்கியா 150 மியூசிக் 2023 அம்சங்கள் (Nokia 150 Music 2023 Specifications): இந்த போன் 2.4 இன்ச் (240 x 320 பிக்சல்கள்) கியூவிஜிஏ டிஸ்பிளே கொண்டுள்ளது. இதிலும் நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் ஓஎஸ் வருகிறது. 4 எம்பி மெமரி மற்றும் 32 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஃஎப்எம் ரோடியோ மற்றும் எம்பி3 பிளோயர் வருகிறது.
டூயல் சிம் சப்போர்ட்டுடன் டூயல் (900/1800MHz) பேண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விஜிஏ (VGA) ரியர் கேமரா கொண்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம்பெற்றுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஹெட்போன் ஜாக் கனெக்டிவிட்டி வருகிறது. IP52 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த போன் 1450mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
இந்த பேட்டரியும் தொடர்ந்து 34 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கொடுக்கும். 20 மணி நேர டாக் - டைம் பேக்கப் கொடுக்கும். இந்த போன் 106.3 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த போன் சார்கோல் (Charcoal), சியன் (Cyan) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதன் விலை ரூ.2699 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நோக்கியா 130 போன் டார்க் ப்ளூ (Dark Blue), பர்பிள் (Purple), லைட் கோல்டு (Light Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் டார்க் ப்ளூ மற்றும் பர்பிள் கலர் போன்களின் விலை ரூ.1,849ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல லைட் கோல்டு கலர் போனின் விலை ரூ.1,949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, நோக்கியா 130 போன் நோக்கியா தளத்திலும், ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், நோக்கிய 150 போன் விற்பனைக்கு கிடைக்கவில்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவான விலையில் மாத கணக்கில் பேட்டரி பேக்கப் போன் வேண்டுமென்றால், இந்த போன்கள் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








