மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 130 இந்தியாவில் (விலை & அம்சங்கள்).!

|

நோக்கியா பிராண்ட் சாதனங்களை தயாரிக்கும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்தியாவில் அதன் நோக்கியா 130 என்ற ஒரு புதிய, சீரமைக்கப்பட்ட மாறுபாட்டை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் சில்லறை விற்பனையாளர்களிம் விற்பனைக்கு கிடைக்கும் இந்த நோக்கியா 130 என்பது ஆனது ரூ1599/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 130 இந்தியாவில் (விலை & அம்சங்கள்)

சிறப்பானதொரு விலைப்புள்ளியில் கிடைக்கும் நோக்கியா 130 சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு என்ற மூன்று வண்ண வகைகளில் வருகிறது. இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில்..

பளபளப்பான முன் பூச்சு

பளபளப்பான முன் பூச்சு

நோக்கியா 130 ஒரு 1.8-அங்குல க்யூவிஜிஏ (240x320) கலர் டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் சாதனத்தில் உள்ள பொத்தான்களுக்கு (விசை) பொருத்தமான ஒரு பளபளப்பான முன் பூச்சும் மற்றும் ஒரு மேட் பேக் கவரும் கொண்டுள்ளது.

எல்இடி டார்ச்லைட்

எல்இடி டார்ச்லைட்

நோக்கியா பீச்சர் மொபைல்களுக்கே உரிய அம்சங்களான எல்இடி டார்ச்லைட் அம்சத்தையும் நோக்கியா 130 கொண்டுள்ளது. வழக்கம்போல இரண்டு முறை விசையை மேல்பக்கமாக அழுத்துவதன் மூலம் ஆன் / ஆஃப் செய்யலாம்.

சேமிப்பு ஆதரவு

சேமிப்பு ஆதரவு

32 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவு கொண்டுள்ள இக்கருவி ஒரு இரட்டை சிம் மொபைல் ஆகும். உடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர்களுக்கான ப்ளூடூத் ஆதரவுடன் வருகிறது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

ஒரு விஜிஏ பின்புற கேமராவுடன் வரும் இக்கருவி ஒரு உள்ளமைக்கப்பட்ட எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ப்ளுடூத் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி

பேட்டரி

இந்த தொலைபேசி நோக்கியா சீரியஸ 30+ இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும்1020 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது 11.5 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 44.5 மணி நேர தொடர் எப்எம் பிளே நேரம் வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

கேம்ஸ்

கேம்ஸ்

அளவீட்டில் 111.5 x 48.4 x 14.2 மிமீ உள்ள நோக்கியா 130 நிஞ்ஜா அப், டேஞ்சர் டாஷ், நைட்ரோ ரேசிங், ஏர் ஸ்ட்ரைக் மற்றும் ஸ்கை கிப்ட் போன்ற ட்ரை அண்ட் பர்சேஸ் கேம்ஸ்களுடன் பிரபல ஸ்னெக் ஜென்ஸியா கேமையும் தன்னுள் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 130 in India: Price, features, and specs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X