Nokia-வின் புது வேட்டைக்காரன்.. மலிவு விலை.. 4ஜி வோல்ட்இ.. 1450mAh பேட்டரி.. எந்த மாடல்?
நோக்கியா தனது புதிய நோக்கியா 125 4ஜி (Nokia 125 4G) போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நோக்கியா 108 போனின் வெளியீட்டுக்குப் பிறகு தற்போது இந்த நோக்கியா 125 4ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன் மேம்பட்ட அம்சங்களும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
நோக்கியா 125 4ஜி அம்சங்கள் (Nokia 125 4G Specifications): 2.4-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய நோக்கியா 125 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு எப்போதும் போல இந்த போன் பின்புறத்தில் QVGA கேமரா (0.1 மெகாபிக்சல்) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முக்கியமான நேரத்தில் புகைப்படங்களை இதன் மூலம் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான கால் அழைப்புகளுக்கு என்றே 4ஜி மற்றும் வோல்ட்இ ஆதரவுடன் இந்த புதிய நோக்கியா 125 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் 4ஜி வசதி இருப்பதால் நம்பி வாங்கலாம். புளூடூத் 5.0 மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான நோக்கியா போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
அதேபோல் 1450mAh பேட்டரி உடன் இந்த நோக்கியா 125 4ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதுவும் நீண்டதூரம் பயணம் செய்யும் பயனர்கள் இதுபோன்ற போனை வாங்குவது நல்லது. அதாவது ஸ்மார்ட்போனில் பேட்டரி விரைவாகத் தீர்ந்துவிடும். அந்த சமயத்தில் இதுபோன்ற போன் இருப்பதால் கால் அழைப்புகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ஹெட்போன் ஜாக், ஃப்ரீ எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், பிளாஷ் லைட் போன் முக்கியமான சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா 125 4ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை 329 yuan (இந்திய மதிப்பில் ரூ.3,881)-ஆக உள்ளது. விரைவில் இந்த நோக்கியா 125 4ஜி போன் ஆனது அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஜி42 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications) : இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ்(560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது போன்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
நோக்கியா ஜி42 5ஜி மாடல் ஆனது 11ஜிபி ரேம் ( 6ஜிபி ரேம் +5ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), 20W சார்ஜிங் , 5000mAh பேட்டரி வசதியுடன் ரூ.10,999 விலையில் நோக்கியா ஜி42 5ஜி போன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








