நோக்கியா 114 டூயல் சிம் போன்: இது எந்த வகையில் நோக்கியா 109யைவிட சிறந்தது?

By Super
|

நோக்கியா 114 டூயல் சிம் போன்: இது எந்த வகையில் நோக்கியா 109யைவிட சிறந்தது?

மொபைல் போன்கள் உற்பத்தியில் சிறந்துவிளங்கும் நோக்கியா நிறுவனம் மற்றுமொரு டூயல் சிம் வசதிகொண்ட போனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய போன் நோக்கியா 114 ஆகும். இந்த புதிய நோக்கியா போன் எளிய ஸ்வாபிங் வசதியுடன்கூடியது. இது நோக்கியாவின் இந்தியா தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

அதேசமயம் இந்த நோக்கியா 114ன் சில நிற்பக்கூறுகளாவன,

அளவுகள் மற்றும் எடை: 110 x 46 x 14.8மிமீ அளவுகொண்டது. எடையானது சுமார் 80 கிராம்கள்.

திரை: 1.8" TFT திரைகொண்ட இந்தபோனின் ரெசொலூசன் 128 x 160 பிக்சல்கள்.

நினைவகம்: நோக்கியா 114, 16எம்பி உள்நினைவகமும், 32ஜிபிக்கு அதிகரிக்கும் வகையிலுள்ள மைக்ரோ SD அமைப்பும் உள்ளது.

கேமரா: 0.3எம்பி VGA ரியர் கேமரா.

இணைப்புகளுக்கு: நோக்கியா 114, ப்ளுடூத் 2.1, GPRS மற்றும் EDGE ஆகிய தொழில்நுற்பங்களுடன் வருகிறது.

பேட்டரி: பேசும்பொழுது 10.5 மணிநேரங்களும், ஸ்டான்ட்பையில் 637 மணிநேரங்களும் நிற்கக்கூடிய 1,020mAh BL-5C பேட்டரி உள்ளது.

விலை: இதுவரையிலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நோக்கியா டூயல் சிம் வசதிகொண்ட 114 போனானது ரூ.2,500க்கு விர்க்கபடாலாமென எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இது டூயல் சிம், ட்விட்டர் மற்றும் பேஷ்புக் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையிலுள்ளது.இது எந்தவகையில் நோக்கியா 109யைவிட சிறந்தது?கடந்த மாதம் இதே நோக்கியா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நோக்கியா 109கான சில சிறப்பம்சங்கள் நோக்கியா 114வுடன் ஒத்துப்போகிறது. பேட்டரி மட்டும் பேசும்பொழுது 7.5 மணிநேரங்களும், ஸ்டான்ட்பையில் 790 மணிநேரங்களும் நிற்கக்கூடியதாக உள்ளது.

மேலும் நோக்கியா 109 பல கலர் வித்தியாசங்களில் கிடைக்கிறது. இதன் விலை சுமார் ரூ.2250.

நோக்கியா 114ல் டூயல் சிம், VGA கேமரா மற்றும் பேட்டரி பேக்கப் வசதிகளிருந்தாலும், விலையை ஒப்பிடுகையில் நோக்கியா 109 சிறந்ததாக பலராலும் சொல்லபடுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X