நோக்கியா 110 4ஜி, நோக்கியா 105 4ஜி மாடல்கள் அறிமுகம்: ரூ.3600-க்கு கீழ் வாங்க முடியுமா?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 110 4ஜி, நோக்கியா 105 4ஜி பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் 4ஜி வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் நோக்கியா பீச்சர் போன் மாடல்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 105 4ஜி
தற்சமயம் இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நோக்கியா 110 4ஜி சாதனம் ஆனது அக்வா, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு நோக்கியா 105 4ஜி சாதனம் ஆனது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 110 4 ஜி மற்றும் நோக்கியா 105 4 ஜி சாதனங்களின் விலை
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த இரண்டு பீச்சர் போன்களின் விலையை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும் நோக்கியா 110 4ஜி சாதனம் ஆனது ரூ.3,600-விலையிலும், நோக்கியா 105 4ஜி மாடல் ரூ.3,100 விலையிலும் விற்பனை செய்யப்படவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1.8-இன்ச் QQVGA டிஸ்பிளே
நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 105 4ஜி மாடல்கள் இரட்டை சிம் (நானோ) ஆதரவுடன் சீரிஸ் 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு பீச்சர் போன் மாடல்களும் 1.8-இன்ச் QQVGA டிஸ்பிளே மற்றும் 120x160 பிக்சல்கள் அடிப்படையில் வெளிவந்துள்ளன. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மாடல்கள்.

குறிப்பாக இந்த இரண்டு புதிய நோக்கிய மாடல்களும் Unisoc T107 SoC ஆதரவுடன் 128ஜிபி ரேம் மற்றும் 48எம்பி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன் மாடல்கள். அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அதேபோல் நோக்கியா 110 4ஜி சாதனத்தின் பின்புறம் ஒரு கேமரா சென்சார் வசதி உள்ளது, பின்பு இதில் mp3 பிளேயர் ஆதரவும் உள்ளது. மேலும் நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 105 4ஜி மாடலிகளில் எஃப்எம் ரேடியோவுடன் wireless mode வசதியும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் இந்த புதிய சாதனங்களில் 3 இன் 1 ஸ்பீக்கர் வசதி மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் வசதியும் உள்ளது. இதுதவிர மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனங்கள். மேலும் நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 105 4ஜி மாடல்களில் 1020எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே ஒரு முழு சார்ஜில் பல நாட்கள் பயன்படுத்த முடியும். பின்பு எல்இடி டார்ச், கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா சாதனங்கள்

ஐடெல் மேஜிக் 2 4ஜி
அண்மையில் ஐடெல் நிறுவனம் தனது ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, வைஃபை மற்றும் ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. மேலும் 1.3எம்பி கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ளது ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடல்.

குறிப்பாக ஐடெல் மேஜிக் 2 4ஜி சாதனம் ஆனது 1900எம்ஏஎச் பேட்டரி, 128எம்பி மெமரி, எஃப்எம்,ஆட்டோகால் ரெக்கார்டர், ஒன்-டச் மியூட் மற்றும் எட்டு கேம்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை ரூ.2,349-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications