மலிவு விலையில் நோக்கியா 110 4ஜி சாதனம் இந்தியாவில் அறிமுகம்.! முழு விவரம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடல். இப்போது இந்த சாதனத்தின்
பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா 110 4ஜி சாதனம் ஆனது நாளை விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா.காம் மற்றும் அமேசான்.இன் வலைத்தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 110 4ஜி சாதனம் ஆனது எச்டி வாய்ஸ்கால் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த 1.8-இன்ச் QVGA கலர் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 120x160 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

இந்த புதிய நோக்கியா 110 4ஜி சாதனம் Unisoc T107 SoC மூலம் இயக்கப்படுகிறது. பின்பு 12எம்பி ரேம் மற்றும் 48எம்பி மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். மேலும் மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த புதிய நோக்கியா 110 4ஜி.
0.8 மெகாபிக்சல் கியூவிஜிஏ பின்புற கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி சாதனம். மேலும் Series 30+ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய நோக்கியா 110 4ஜி. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
புதிய நோக்கியா 110 4ஜி சாதனத்தில் 1020எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே குறிப்பிட்ட நாட்கள் வரை பேட்டரி குறையாமல் பயன்படுத்த முடியும். இதுதவிர எஃப்எம் ரேடியோ, வீடியோ பிளேயர், எம்பி 3 பிளேயர், 3 இன் 1 ஸ்பீக்கர்கள் என பல்வேறு சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி சாதனம்.
நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலின் விலை ரூ.2,799-ஆக உள்ளது. மேலும் மஞ்சள், அக்வா மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புதிய பீச்சர்போன் மாடல் கிடைக்கும். குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த சானம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் அதிநவீன ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது


Click it and Unblock the Notifications