Home
Mobile

இனி ஜியோபோன் 4ஜி எதுக்கு? அறிமுகமானது கம்மி விலையில் Nokia 110 4ஜி (2023) போன்.! எங்கு வாங்கலாம்?

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் (Jio Bharat Phone) எனும் 4ஜி ஃபீச்சர் போனை இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஜியோபோன் 4ஜி-க்கு போட்டியாக நோக்கியா நிறுவனமும் நோக்கியா 110 4ஜி (2023) போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன் உடன் நோக்கியா 110 2ஜி (2023) போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களுக்கும் அட்டகாசமன வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இனி ஜியோபோன் 4ஜி எதுக்கு? அறிமுகமானது கம்மி விலையில் Nokia 110 4ஜி.!

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்: 1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் QQVGA ரெசல்யூசன் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி (2023) மாடல். குறிப்பாக 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஃபீச்சர் போன். எனவே இந்த ஃபீச்சர் போனை நம்மி வாங்கலாம்.

மேலும் இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன் எஸ்30 பிளஸ் இயங்குதளத்தை (ஓஎஸ்) கொண்டுள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதி, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த நோக்கியா ஃபீச்சர் போன் வெளிவந்துள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன். எனவே இதில் 32ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த முடியும். மேலும் எப்எம் ரேடியோ ஆதரவு மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு நோக்கியா 110 4ஜி (2023) போன் வெளிவந்துள்ளது. மிட்நைட் ப்ளூ மற்றும் ஆர்டிக் பர்பிள் நிறங்களில் இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் நோக்கியா 110 4ஜி (2023) போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு QVGA கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஃபீச்சர் போன். பின்பு இந்த போனின் எடை 94.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்: 1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் QQVGA ரெசல்யூசன் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 2ஜி (2023) மாடல். குறிப்பாக இந்த போன் 2ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் எஸ்30 பிளஸ் இயங்குதளத்தை (ஓஎஸ்) கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஃபீச்சர் போன்.

இனி ஜியோபோன் 4ஜி எதுக்கு? அறிமுகமானது கம்மி விலையில் Nokia 110 4ஜி.!

32ஜிபி மெமரி கார்டை இந்த நோக்கியா 110 2ஜி (2023) போனில் பயன்படுத்த முடியும். பின்பு 1000 எம்ஏஎச் பேட்டரி, எப்எம் ரேடியோ வசதி, நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ், மைக்ரோ யுஎஸ்பி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா 110 2ஜி (2023) போன் வெளிவந்துள்ளது. சர்கோல் மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த நோக்கியா 110 2ஜி (2023) போன அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன விலை? நோக்கியா 110 4ஜி (2023) போனின் விலை ரூ.2,499-ஆக உள்ளது. பின்பு இந்த நோக்கியா 110 2ஜி (2023) மாடலின் விலை ரூ.1699-ஆக உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய நோக்கியா போன்கள் Nokia.com, ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 110 4G (2023) and Nokia 110 2G launched in India: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X