மலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.!

|

நோக்கியா, ஜியோ உள்ளிட்ட நிறுவனம் தொடர்ந்து பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக நோக்கியா நிறுவனம் கொண்டுவரும் பீச்சர்போன் மாடல்களுக்கு சந்தையில் நல்லவரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

 நோக்கியா 110

தற்சமயம் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 110 பீச்சர் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் நோக்கியா
105பீச்சர் போனை விட ஒரு படி மேலே உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 எஃப்எம் ரேடியோ

எஃப்எம் ரேடியோ

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக களமிறங்கியுள்ளது இந்த நோக்கியா 110(2019) பீச்சர்போன் மாடல், அதன்படி இந்த மொபைலில் சேமிக்கப்பட்ட எம்பி3-களையும், எஃப்எம் ரேடியோவின் வழயாக பாடல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். பின்பு எப்போதும் போல தனது பிரபலமான ஸ்னேக் கேம் ஆதரவை சேர்த்துள்ளது இந்த மொபைல்.

கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'!கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை - 'டாக்குமெண்ட் கிராப்'!

1.77-அன்ச் QQVGA டிஸ்பிளே

1.77-அன்ச் QQVGA டிஸ்பிளே

நோக்கியா 110(2019) மாடல் பொதுவாக 1.77-அன்ச் QQVGA டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 120x160 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 4எம்பி அளவிலான ரேம்

4எம்பி அளவிலான ரேம்

இந்த புதிய நோக்கியா பீச்சர்போன் மாடல் SPRD 6531E ப்ராசஸர், 4எம்பி அளவிலான ரேம் மற்றும் 4எம்பி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் நோக்கியா 110 மாடல் ஆனது 30பிளஸ் மென்பொருளை இயக்குகிறது உடன் மைக்ரோ-யூ.எஸ்.பி 2.0 போர்ட் ஒன்றையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் சிம் வசதி

டூயல் சிம் வசதி

இந்த நோக்கியா 110 (2019) சாதனத்தில் டூயல் சிம் வசதியைப் பயன்படுத்த முடியும், பின்பு இதில் மினி சிம்களை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது, அதன் வழியாக
32ஜிபி வரையிலாக மெமரி நீட்டிப்பை ஆதரவைப் பெறமுடியும்.

மாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.!மாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.!

800எம்ஏஎச் பேட்டரி

800எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 110 (2019) மொபைலில் எதிர்பார்த்தபடியே 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இது 18.5நாட்கள் வரை பேட்டரி ஆயுள் தாங்கும் வசதி உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4 மணிநேர அளவிலான பேச்சு நேரம், 27 மணிநேர அளவிலான எம்பி3 பிளேபேக், 18மணிநேர எஃப்எம் ரேடியோ பிளேபேக் ஆகியவற்றை வழங்குவதாகவும் எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 110 (2019) சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட பின்புற கேமரா, எல்இடி டார்ச்லைட், பிரபலமாக கேம் ஆன ஸ்னேக்
கேம், Ninja Up, Air Strike, Football Cup மற்றும் Doodle Jump உள்ளிட்ட கேம் ஆதரவும் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 அக்டோபர் 18

அக்டோபர் 18

இந்த புதிய நோக்கியா மொபைல் வரும் அக்டோபர் 18 தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ரூ.1,599 என்கிற விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும். குறிப்பாக கருப்பு, நீலம், பின்க் உள்ளிட்ட நிறங்களில் இந்த நோக்கியா 110 சாதனம் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 110 (2019) Feature Phone Launched: Price in India, Specifications and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X