Home
Mobile

மலிவு விலையில் 2ஜி வசதியுடன் வரும் நோக்கியா 109 மொபைல்

By Karthikeyan
மலிவு விலையில் 2ஜி வசதியுடன் வரும் நோக்கியா 109 மொபைல்

தனது புதிய லூமியா போன்களைக் களமிறக்குவதில் தீவிரமாக இருந்துவரும் நோக்கியா தற்போது ஒரு புதிய மலிவு விலை மொபைலை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய மொபைலுக்கு நோக்கியா 109 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மொபைல் நோக்கிய சீரிஸ் 40 போன் இயங்கு தளத்தில் இயங்கும்.

இந்த புதிய மொபைல் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் மொபைல் ஜிபிஆர்எஸ், எட்ஜ் 2ஜி இண்டர்நெட் இணைப்பு வசதி உள்ளது. இதனால் இந்த மொபைலில் மிக எளிதாக ப்ரவுஸ் செய்ய முடியும்.

அடுத்ததாக இந்த மொபைல் மிகவும் குறைந்த விலையில் வருகிறது. அதாவது 42 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது. இந்த மொபைலில் 2ஜி இணைப்பு உள்ளதால் இதில் நோக்கியாவின் எக்ஸ்ப்ராஸ் ப்ரவுசரைப் பயன்படுத்த முடியும்.

இந்த நோக்கிய 109 மொபைல் 1.8 இன்ச் அளவில் ஒரு சிறிய டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் மெமரியை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த போனில் கேமரா கிடையாது. ஆனால் இந்த மொபைல் அழைப்புகள், இன்டர்நெட் மற்றும் இசை ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

இதில் ஒரு லவுட் ஸ்பீக்கர் உள்ளதால் அருமையாக பாடல்களைக் கேட்க முடியும். இந்த மொபைல் கருப்பு மற்றும் சியான் ஆகிய நிறங்களில் வருகிறது. முதலில் சீனா, பசிபிக் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த போன் களம் இறங்க இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X