Home
Mobile

செம்ம அப்டேட்.. சத்தமின்றி இரண்டு நோக்கியா போன்களுக்கு வழங்கப்பட்ட புதிய அம்சங்கள்.. என்னென்ன தெரியுமா?

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான பீச்சர் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் இரண்டு பீச்சர் போன்களுக்கு புதிய ஆப் மற்றும் சாப்ட்வேர் அப்டேட்களை வழங்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம். அதாவது நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி போன்களுக்கு தான் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

சத்தமின்றி இரண்டு நோக்கியா போன்களுக்கு வழங்கப்பட்ட புதிய அம்சங்கள்..

நோக்கியா 106 4ஜி (Nokia 106 4G) மற்றும் நோக்கியா 110 4ஜி (Nokia 110 4G) போன்கள் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக நோக்கியா 106 4ஜி போனை ரூ.2199 விலையில் வாங்க முடியும். பின்பு நோக்கியா 110 4ஜி போன் ரூ.2399 விலையில் வாங்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு போன்களுக்கும் வழங்கப்பட்ட புதிய அப்டேட்: அதாவது யூடியூப் ஷார்ட்ஸ் வசதி நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி போன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்குப் பிடித்த ஷார்ட்ஸ் வீடியோக்களை இந்த போன்களை எளிமையாகப் பார்க்க முடியும். குறிப்பாக இந்த போன்களில் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்ப்பது தனித்துவமான அனுபவத்தைத் தரும்.

கிளவுட் ஆப்ஸ்: இந்த போன்களில் கிளவுட் ஆப்ஸ் பயன்படுத்த முடியும். இதன் மூலம் செய்திகள், வானிலை அறிவிப்புகள், கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் பல்வேறு முக்கியமான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக இது பயன்படுத்த மிக வேகமாகவும் எளிதானதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாப்ட்வேர் அப்டேட் அப்டேட் மூலம் யுபிஐ வசதியை மிகவும் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். பின்பு புதிய கேம் வசதிகள் இந்த போன்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி போனை வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது நோக்கியா 110 4ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்: எஸ்30 பிளஸ் இயங்குதளத்தை (ஓஎஸ்) கொண்டுள்ளது நோக்கியா 110 4ஜி (2023) போன். எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதி, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டு இந்த நோக்கியா ஃபீச்சர் போன் வெளிவந்துள்ளது.

இந்த நோக்கியா 110 4ஜி (2023) மாடல் 1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் QQVGA ரெசல்யூசன் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஃபீச்சர் போன். மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன். எனவே இதில் 32ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த முடியும். மேலும் எப்எம் ரேடியோ ஆதரவு மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு நோக்கியா 110 4ஜி (2023) போன் வெளிவந்துள்ளது. மிட்நைட் ப்ளூ மற்றும் ஆர்டிக் பர்பிள் நிறங்களில் இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தமின்றி இரண்டு நோக்கியா போன்களுக்கு வழங்கப்பட்ட புதிய அம்சங்கள்..

நோக்கியா 110 4ஜி (2023) போன் 1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு QVGA கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஃபீச்சர் போன். பின்பு இந்த போனின் எடை 94.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நோக்கியா 106 4ஜி போனும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த இரண்டு பீச்சர் போன்களையும் நம்பி வாங்கலாம். பின்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான பீச்சர் போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 106 4G and Nokia 110 4G received new apps and software update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X