மலிவு விலையில் அசத்தலான நோக்கியா 106(2018) சாதனம் அறிமுகம்.!
இந்த சாதனம் அதிக நாட்கள் சார்ஜ் தாங்கும் திறமையுடன் வெளிவந்துள்ளது, பின்பு சாம்பல் நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறவனம் தற்சமயம் புதிய நோக்கியா 106(2018) பீச்சர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த பீச்சர்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பீச்சர்போன் மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னேக் கேம் இடம்பெற்றுள்ளது, பின்பு கீபோர்டு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 70.2கிராம் எடை கொண்டுள்ளது இந்த நோக்கியா 106(2018) பீச்சர்போன்.

டிஸ்பிளே:
நோக்கியா 106(2018) பீச்சர் போன் சாதனம் 1.8-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 160 x 128 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இந்த சாதனத்தில் மீடியாடெக் 6261 செயலி இடம்பெற்றுள்ளது, பின்பு 4எம்பி ரேம் மற்றும் 2000கான்டாக்ட், 500டெக்ஸ்ட் மெசேஜ் சேமித்துக் கொள்ளும் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
நோக்கியா 106(2018) பீச்சர் போனில் 800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ரேடியோ, பிளாஷ்லைட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
இந்த சாதனம் அதிக நாட்கள் சார்ஜ் தாங்கும் திறமையுடன் வெளிவந்துள்ளது, பின்பு சாம்பல் நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் ஆரம்ப விலை ரூ.1,700-ஆக உள்ளது, விரைவில் இந்திய சந்தைக்கு இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








