வெறும் ரூ.999 போதும்.. UPI வசதி.. புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்த நோக்கியா.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் நோக்கியா போன்களில் இருப்பதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புதிய நோக்கியா பீச்சர் போன் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது நோக்கியா 105 கிளாசிக் (Nokia 105 Classic) பீச்சர் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் யுபிஐ வசதியுடன் வெளிவந்துள்ளது. நோக்கியா 105 கிளாசிக் போனில் இன்-பில்ட் யுபிஐ அப்ளிகேஷன் உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாகவும் தடையின்றியும்பணப் பரிமாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோக்கியா 105 கிளாசிக் போனில் 800 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போன் 15 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த போனில் டூயல் சிம் ஆதரவு மற்றும் எப்எம் ரேடியோ ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நோக்கியா 105 கிளாசிக் போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சார்கோல் கிரே மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த நோக்கியா 105 கிளாசிக் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை ரூ.999-ஆக உள்ளது. நோக்கியா.காம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த புதிய நோக்கியா பீச்சர் போனை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்மி விலையில் யுபிஐ வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நோக்கியா ஜி42 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நோக்கியா போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது.

இந்த நோக்கியா போன் டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
நோக்கியா ஜி 42 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். மேலும் இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. தற்போது அமேசான் தளத்தில் ரூ.11,999 விலையில் நோக்கியா ஜி42 போன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








