வீட்டுக்கு வீடு 2 ஆர்டர் விழுது.. ரூ.999 க்கு NOKIA போன்.. UPI ஆதரவு, 22 நாள் பேட்டரி.. எந்த மாடல்?
2025 சுதந்திர தின சிறப்பு விற்பனையாக, பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் ப்ரீடம் சேல் 2025 (Flipkart Freedom Sale 2025) இன் கீழ் மிகவும் பிரபலமான நோக்கியா பீச்சர் மொபைல் (NOKIA Feature Phone) ஒன்று ரூ.999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
என்ன மாடல்? அது நோக்கியா 105 2023 மாடல் ஆகும். தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் இது, அதன் அசல் விலையான ரூ.1,599 க்கு பதிலாக வெறும் ரூ.999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் இந்த ஆபர் விலை சார்கோல் என்கிற பிளாக் கலர் ஆப்ஷன் மீது மட்டுமே கிடைக்கிறது, மற்ற கலர்கள் ரூ.1270 க்கு வாங்க கிடைக்கிறது.

நோக்கியா பிராண்டிங் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள க்ளோபல் எச்எம்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த மாடல், தற்போது ரூ.1,199 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக இது அதிகபட்சம் ரூ.600 (பிளிப்கார்ட்டில்), குறைந்த பட்சம் ரூ.300 (எச்எம்டி வலைதளத்தில்) என்கிற விலை குறைப்பை பெற்றுள்ளது.
நோக்கியா 105 2023 மாடலின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை நோக்கியா 105 2023 மாடல் ஆனது 1.8-இன்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளேவை (QVGA Display) கொண்டுள்ளது. இந்த பீச்சர் மொபைல் போன் ஆனது சீரீஸ் 30+ ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Series 30+ Operating System) மூலம் இயக்கப்படுகிறது.
நோக்கியா 105 2023 மாடல் ஆனது வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களுடன் (Wired and Wireless Mode) கூடிய எஃப்எம் ரேடியோவுடன் (FM Radio) ஆதரவையும் கொண்டுள்ளது. கூடவே இந்த நோக்கியா பீச்சர் போன் ஆனது 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (3.5mm Headphone Jack) மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்டையும் (USB Type-C Port) கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை நோக்கியா 105 2023 மாடல் ஆனது 1000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 12 மணிநேர டால்க் டைம் (12 Hours Talktime) அல்லது 22 நாட்கள் வரையிலான ஸ்டேன்ட்பை டைமை (22 Days Standby Time) வழங்கும்
எல்லாவற்றை விட முக்கியமாக, நோக்கியா 105 2023 மாடல் ஆனது இன்பில்ட் யுபிஐ 123பே (Inbuilt UPI 123PAY) ஆதரவுடன் வருகிறது. இதன் மூலம் இண்டர்நெட் அக்சஸ் (Internet Access) இல்லாமலேயே யுபிஐ (UPI) எனப்படும் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை (Unified Payment Interface) பயன்படுத்தி உடனடியாக பணம் செலுத்த முடியும்.
பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2025 ஆனது அமேசானுக்கு போட்டியாக நடத்தப்பட்டாலும் கூட அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 கீழ் கிடைக்கும் மொபைல் ஆபர்கள் தான் பெஸ்ட் டீல்களாக உள்ளன. அமேசானில் குடியரசு தின சிறப்பு விற்பனையில் - 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.5399 முதலும், 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.7999 முதலும் வாங்க கிடைக்கிறது.
ஐடெல் ஸெனோ 10 (Itel Zeno 10) ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Freedom Festival Sale 2025) இன் ஒரு பகுதியாக, அதன் அசல் விலையான ரூ.7399 க்கு பதிலாக ரூ.5399 க்கு வாங்க கிடைக்கிறது. இது பேங்க் மற்றும் கூப்பன் ஆபர் ஆகியவற்றை உள்ளடக்கிய விலையாகும்.
இதேபோல ரெட்மி ஏ4 5ஜி ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் நடக்கும் சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக அதன் எம்ஆர்பி விலையான ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3000 விலை குறைப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








