90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கேம் கூட இருக்கு: நோக்கியா 105 (2022), நோக்கியா 105 பிளஸ் போன்கள் அறிமுகம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 105 (2022), நோக்கியா 105 பிளஸ் ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் தரமான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளன. குறிப்பாக இவை வயர்லெஸ் எஃப்எம் ஸ்ட்ரீமிங் ஆதரவு மற்றும் சிறந்த பேட்டரி பேக்கப் அதரவுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த சாதனங்களின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா 105 (2022) சாதனத்தின் விலை ரூ.1,299-ஆக உள்ளது, பின்பு இந்த சாதனம் Charcoal மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நோக்கியா 105 பிளஸ் சாதனத்தின் விலை ரூ.1,399-ஆக உள்ளது, குறிப்பாக இந்த சாதனம் Charcoalமற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு ஃபீச்சர் போன்களும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நோக்கியா வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்போது இரண்டு ஃபீச்சர் போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த 2ஜி ஃபீச்சர் போன்கள் 1.77-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் S30+ இயங்குதளத்தில் இயங்கும்.
அதேபோல் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் வசதியும் உள்ளன. முன்பு குறிப்பிட்டபடி, இந்த நோக்கியா போன்கள் வயர்லெஸ் எஃப்எம் ஸ்ட்ரீமிங் ஆதரவையும் வழங்குகின்றன.

குறிப்பாக நோக்கியா 105 (2022), நோக்கியா 105 பிளஸ் போன்கள் நீண்ட காலம் நீடிக்கும்' பேட்டரியுடன் வெளிவந்துள்ளன. அதாவது இவற்றின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக சுமார் 1.5 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. பின்பு 12 மணி நேரம் டாக்டைம், 18 நாட்கள் வரை standby time-ஐ வழங்குகிறது இந்த புதிய நோக்கியா போன்கள்.

இரண்டு போன்களிலும் இன்பில்ட் மெமரி ஆனது 2000 காண்டாக்ட் மற்றும் 500 SMS செய்திகள் சேமிக்கப் பயன்படும். மேலும் இவை உள்ளமைக்கப்பட்ட டார்ச்சைக் கொண்டுள்ளன. அதேபோல் ஸ்னேக் போன்ற கிளாசிக் கேம்களுடன் வெளிவந்துள்ளன இந்த அட்டகாசமானசாதனங்கள்.

குறிப்பாக நோக்கியா 105 பிளஸ் மாடலில் 32ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த முடியும். கூடுதலாக இது ஒரு எம்பி3 பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு நோக்கியா போன்களின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது என்றுதான்
கூறவேண்டும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications