2018 : ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் வெளிவரும் நோக்கியா 10.!
நோக்கியா 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
எச்டிஎம் குளோபல் நிறுவனம் தற்சமயம் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் அறிவித்துள்ளது, அதன்படி நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 10 ஸ்மார்ட்போன் மாடல் வரும் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
எல்ஜி ஜி7, எல்ஜி ஜி7 பிளஸ், எச்டிசி யு12, எச்டிசி யு12 பிளஸ், மோட்டோ இசெட், கேலக்ஸி நோட் 9, கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்னாப்டிராகன் 845 செயலி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் நோக்கியா 10 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications